மத்தியமுகாம் நியூவே இளைஞர் கழகத்தின் கலாச்சார விளையாட்டு விழா

0
250

(எம்.எம்.ஜபீர்)

(12)மத்தியமுகாம், சாளம்பைக்கேணி-03, நியூவே இளைஞர் கழகத்தின் 2ஆவது ஆண்டு நிறைவையும் மற்றும் நோன்புப் பெருநாளையும் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு 12 ஆம் கொளனி அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (08) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வு நியூவே இளைஞர் கழகத்தின் விழாக்குழு தலைவர் ஏ.சஜஹான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நியூவே இளைஞர் கழகத்தின் ஸ்தாபக தலைவர் ஏ.எல்.ஏ.சீத்தீக், அம்பாரை மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற பிரதி அமைச்சருமான ரீ.சுதன், 12ஆம் கொளனி நூராணிய ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.சீ.அன்வர், மத்திய முகாம் -சவளக்கடை அல்-அமான சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஏ.வீ.நபாஸ், அகதிய பாசாலையின் அதிபரும், அல்-அமானத் சமூக சேவைகள் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான ஏ.ஜெ.எம்.கில்வான், கிராம சேவக உத்தியோகத்தர் ஏ.வீ.எஸ்.அர்சாத், நாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.ஜபீர், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் அமைப்பாளர் எஸ்.ஆதவன், நியூவே இளைஞர் கழகத்தின் தலைவர் ஏ.எஸ்.சனூஸ், நியூவே இளைஞர் கழகத்தின் செயலாளர் எஸ்.ஆசீர், அகதிய பாடசாலையின் செயலாளர் ஏ.வஜீப், உள்ளிட்ட பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி, உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, முட்டி உடைத்தல், கிறீஸ் கம்பம் ஏறிதல், துவிச்சக்கரவண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், நாடகம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது.

(18) (24) (26) 12

LEAVE A REPLY