முஸ்லிம்களுடனான எனது நல்லுறவை குலைத்துவிட்டனர்: பெருநாள் செய்தியில் மஹிந்த ராஜபக்ஷ

0
280

mahinda1போலி­யான கட்டுக் கதைகள், தவ­றான குற்­றச்­சாட்­டுக்கள் ஊடாக எனக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் இருந்த நல்­லு­ற­வினை குலைத்­து­விட்­டனர் எனவும் அன்­றி­ருந்­ததைப் போலவே இன்றும் முஸ்­லிம்­க­ளுடன் நல்­லு­றவை தான் பேணு­வ­தா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

புனித நோன்புப் பெரு நாளை முன்­னிட்டு சமூக வலைத்­த­ள­மான முகப் புத்­த­கத்தில் அவர் வெளி­யிட்­டுள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே இதனைத் தெரி­வித்­துள்ளார்.

அதில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, ‘ஆட்சி மாற்றம் ஒன்­றினை நோக்­காகக் கொண்டு, இரு இனங்­க­ளி­டையே விரி­சலை ஏற்­ப­டுத்தி, அத­னூ­டாக அர­சியல் இலாபம் தேடு­ம­ள­வுக்கு அவர்கள் கொடூ­ர­மா­ன­வர்கள். போலி­யான கட்டுக் கதைகள், தவ­றான குற்­றச்­சாட்­டுக்கள் ஊடாக எனக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் இருந்த நல்­லு­ற­வினை அவர்கள் பாதிப்­ப­டையச் செய்­தனர்.

எனினும் பல தசாப்­தங்­க­ளாக எனது அர­சியல் வாழ்க்கை முழு­வதும் முஸ்லிம் சமூகம் நோக்கி நான் நீட்­டிய நட்புக் கரம் அன்று போலவே என்றும் வித்­தி­யா­ச­மின்றி தொடரும் என்­பதைக் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

உண்­மையே எப்­போதும் வெல்லும் என நான் நம்­பு­கிறேன்.

இஸ்­லா­மிய சொந்தங்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் நன் நாளில் பிராத்திக்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Vidivelli

LEAVE A REPLY