“பொறு­மை காப்போம்” அ.இ. ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம்களிடம் வேண்டுகோள்!

0
867

ACJU 01முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத சக்­திகள் மீண்டும் தமது செயற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்­ள்ள நிலையில், ரமழான் முழு­வதும் ஆன்­மீகப் பயிற்சி பெற்று தர்­மங்கள் வழங்கி நல் அமல்கள் செய்­துள்ள நாம் எமது நற்­பண்­பு­களைப் பேணிப் பொறு­மை­ காக்க வேண்டும் என உலமா சபை தெரிவித்துள்ளது.

பெரும்­பான்மை சமூ­கத்தில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் நாம் உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மை­யாகி விடக்­கூ­டாது எனவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை முஸ்­லிம்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் எம்.எம்.ஏ.முபாரக் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு விடுத்­துள்ள அறி­வு­றுத்­த­லிலேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட அறி­வு­றுத்­தலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஞான­சார தேரர் முஸ்­லிம்கள் தமது உயி­ரிலும் மேலாகக் கருதும் அல்­லாஹ்­வையும் முஹம்­மது நபி­யையும் அவ­ம­தித்துப் பேசி­யுள்­ள­மைக்கு அவ­ருக்கு எதி­ராக உலமா சபை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறை­யிட்­டுள்­ளது. ஏனைய முஸ்லிம் அமைப்­பு­களும் முறைப்­பா­டு­களை முன்­வைத்­துள்­ளன.

ஒரு மாத­காலம் நாம் தொட­ராக ஆன்­மீகப் பயிற்­சிகள் பெற்­றி­ருக்­கிறோம். பசித்­தி­ருந்து நோன்பு நோற்று அல்­லாஹ்­விடம் கையேந்­தி­யிருக்­கிறோம். நிச்­சயம் அல்லாஹ் எம்மைப் பாது­காப்பான். அதனால் நாம் உணர்ச்­சி­வ­சப்­ப­டாது நிதா­ன­மாக நடந்­து­கொள்ள வேண்டும்.

ரமழான் மாதத்தில் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தையும் சக வாழ்­வி­னையும் பலப்­ப­டுத்தும் வகை­யி­லான இப்தார் நிகழ்­வுகள் நடந்­தேறின.

இரா­ணுவமும் ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்தார் நிகழ்­வு­களில் நல்­லி­ணக்­கமும் தேசிய ஒரு­மைப்­பா­டுமே வலி­யு­றுத்­தப்­பட்­டன.

எனவே நாட்டின் பெரும்­பான்மைச் சமூ­கத்தின் பெரும்­பான்­மை­யினர் இன­நல்­லி­ணக்­கத்­தையும் நல்­லு­ற­வை­யுமே ஆத­ரிக்­கின்­றனர்.

ஒரு சிறிய குழு­வி­னரே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றனர். இந்த இன­வாதக் குழு­வினர் முஸ்­லிம்­களின் நட­வ­டிக்­கை­களை மிகவும் உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கின்­றனர்.

அதனால் நாம் பண்­பாட்­டா­ளர்­க­ளாக ஏனைய மதங்­க­ளையும் கௌர­விப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும்.

உலமா சபை இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் சக வாழ்­வி­னையும் வளர்ப்­ப­தற்­காக பல செயற்திட்டங்களை வகுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களாகவும் சட்டத்தை மீறாத நற்பண்புள்ள முஸ்லிம்களாக ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாகவும் நாம் வாழவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Vidivelli

LEAVE A REPLY