சுவையான மஷ்ரூம் பெப்பர் ஆம்லெட்

0
23

தேவையான பொருட்கள்:

ஆலிவ் எண்ணெய் -1 தேக்கரண்டி
சிவப்பு குடை மிளகாய் – 1
பச்சை குடை மிளகாய் – 1
காளான் – 200 கிராம்
வெங்காயம் – 1 சிறியது
முட்டை – 3
மிளகு தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

201607081049058624_how-to-make-Tasty-Mushroom-Pepper-omelet_SECVPF* குடைமிளகாய், காளான், வெங்காயம் அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்..

* ஒரு கிண்ணத்தில் முட்டையை ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அதில் வெங்காயம், குடைமிளகாய், காளான் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். குடைமிளகாய் கலர் மாறக்கூடாது.

* 5 நிமிடம் வதங்கியவுடன் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி காய்கள் மீது முழுவதுமாக பரவும் படி நன்றாக பரப்பி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.

* 2 நிமிடம் ஆனவுடன் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

* சத்தான இந்த ஆம்லெட்டில் குறைந்த கலோரி உள்ளது. டயட்டில் உள்ளவர்கள் இதை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.

LEAVE A REPLY