முன்னாள் பாகிஸ்தான் டெஸ்ட் வீரர் மற்றும் நடுவர் காலமானார்

0
132

201607081823274432_Former-Pakistan-Test-player-and-umpire-Javed-Akhtar-dies_SECVPF1962-ம் ஆண்டு லீட்ஸில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தனது 21 வயதில் அறிமுகமானார் ஜாவேத் அக்தர். இந்த போட்டியில் அவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. அத்துடன் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

1959-ல் இருந்து 1976 வரை சுமார் 17 வருடங்கள் கிரிக்கெட்டில் தொடர்பு இருந்தாலும் அந்த ஒரு டெஸ்டிற்குமேல் அவர் விளையாடவில்லை.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் சியால்கோட்டில் நடைபெற்ற பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதன்முறையாக நடுவராக செயல்பட்டார். 1997 முதல் 1999 வரை ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் இடம்பிடித்து 18 டெஸ்ட் மற்றும் 40 ஒருநாள் போட்டிகளில் நடுவராக செயலாற்றி உள்ளார்.

LEAVE A REPLY