அதிபர் கிம் ஜாங்-உன் மீது அமெரிக்கா தடை

0
136

201607080142554632_North-Korea-Says-US-Sanctions-On-Leader-A-Declaration-Of-War_SECVPFஉள்நாட்டில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அமெரிக்கா நேற்று தடை விதித்தது. தடை செய்யப்பட்டோருக்கான கருப்பு பட்டியலில் அவரது பெயரை அமெரிக்கா சேர்த்தது.

வடகொரியாவின் அரசியல் சிறை முகாமில் உள்ள கைதிகளை சித்ரவதை செய்வது, கொல்வது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை கிம் ஜாங் உன் மீது அமெரிக்கா கூறியுள்ளது.

இந்நிலையில், அதிபர் கிம் ஜாங்-உன்னை தடைசெய்யப்பட்டோருக்கான கருப்பு பட்டியலில் சேர்த்ததன் மூலம் அமெரிக்கா போர் பிரகடனத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடகொரிய தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான எதிர் நடவடிக்கைகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மோசமான விரோத நடவடிக்கை என்று வடகொரியா வெளியுறவுத் துறை மந்திரி பியாங்கியாங் கூறியுள்ளார்.

எங்களை எதிர்கொள்ள அஞ்சி இப்படி ஒரு விஷயத்தை அமெரிக்கா கையிலெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY