தைவான் ரெயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் காயம்

0
80

201607080525138911_24-injured-in-a-blast-in-Taiwan-train_SECVPFதைவான் நாட்டின் தலைநகர் தைபே நகர் அருகே ரெயில் வண்டி ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. தைபே அருகே ஜின்பிய்டு என்ற மெட்ரே ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதிக சத்தத்துடன் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சுமார் 24 பேர் காயமடைந்துள்ளனர்.. விஷயம் அறிந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் காயமடைந்தவர்களை மீட்டனர்.

குண்டு வெடித்ததையடுத்து அங்கு வந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை தீய நோக்கத்துடன் யாரோ நிகழ்த்தி இருக்கலாம் என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டின் பிரீமியர் லின் சுவான் கூறியுள்ளார்.

சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு காணப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து சேதமடைந்தன.

LEAVE A REPLY