போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 2500 இளையோர்களின் நன்மை கருதி தொழிற்பேட்டை அமைக்குமாறு வேண்டுகோள்

0
71

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

0b1b6191-5a4d-4c9e-908c-f88c800568e9மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் சுமார் 2500 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தற்போது வேலைவாய்ப்பற்று இருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு இப்பிரதேசத்திற்கு ஏற்ற ஓர் தொழிற்போட்டை அமைத்து வேலைவாய்ப்பு வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கமும், சம்மந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், உடன் முன்வர வேண்டும் என போரதீவுப்பற்று இளைஞர் சம்மேளனத் தலைவர் பி. தவராசா தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

பிரதேச இளைஞர்கள் படித்துவிட்டு வட்டிக்குப் பணம் பெற்றுக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் தேடிச் செல்கின்றனர். அந்நாடுகளிலும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புக்களோ, ஏற்ற ஊதியமோ கிடைப்பதில்லை. கிடைப்பதைக் கொண்டு வட்டிக்கு பெற்ற பணத்தைத்தான் திருப்பிச் செலுத்த முடிகின்றதே தவிர அவர்களால், முன்னேற முடியவில்லை.

இதுபோன்றுதான் இங்குள்ள படித்த இளம்பெண்களும், தொழிலின்றி வீட்டிலிருக்கின்றார்கள், தொழிற்பேட்டைகள் நகர்ப்புறங்களை அண்டியதாகவே அமைகின்றன. அதிக கிராமங்களைக் கொண்ட பகுதிகளை இணைத்து அங்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டால் அது இப்பிரதேச இளைஞர் யுவதிகளுக்கும் பெரும் வாய்ப்பாக அமையும்.

LEAVE A REPLY