இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது பேராளர் மாநாடு மட்டக்களப்பில் …..

0
487

(விசேட நிருபர் )

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது பேராளர் மாநாடு இன்று(8.7.2016) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின், மற்றும் உப தலைவர்களான நிசாந்த தேசப்பிரிய மற்றும் ரசிக ஹந்தன்கொட மட்டக்களப்பு மாவட்ட தலைவர் குமர குரூபரன், மட்டக்களப்பு மாவட்ட செயாளர் பி.உதயரூபன் உட்பட உப தவைர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் சிங்கள தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக இருந்து சேவையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ ஆட்சி மாற்றத்தின் பின்னர் கல்விப்புலச் செயற்பாடுகளில் சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் எந்தவித பெரிய மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வில்லை.

பிழையான முக மூடி கொண்ட அரசியல் வாதிகளை சமூகத்தின் முன் அடையாளப்படுத்த வேண்டும். கல்விப்புலச் செயற்பாடுகளில் பல விடயங்களை இவ்வாறான அரசியல் வாதிகளே தீர்மானங்களை எடுக்கின்றனர்.

எமது ஆசியர் சங்க உறுப்பினர்களிடையே ஐக்கியமும் ஒற்றுமையும் அவசியமாகும் நாம் நிரந்தர சமாதானத்திற்கு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றோம். ஆசியர்களுக்கின்ற பிரச்சினைகளை அரசியல் வாதிகளுடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். நமது சங்கம் ஆசியர்கள் அதிபர்களின் மன்னேற்றத்தின்றாகவும் அவர்களின் உரிமைக்காகவும் பாடுபட்டு வருகின்றது என்றார்.

245ffd17-42d7-433d-813d-42e9ccbdca8b

dc149053-7369-4760-b4fa-8208b51941c0

fcfdfa5c-fcd6-4d33-a09d-f02d1c547f61

LEAVE A REPLY