(Poem) நிழல் ராஜா

0
15

(Mohamed Nizous)

நிழலுக்கு
நீ
நினைத்த பேரை
நிச்சயிக்கலாம்.
நிழல் அரசன் என்று கூட
குழல் முழங்கலாம்
குதூகலிக்கலாம்.
ஆனால்,
நிழலுக்கு
வைத்த பேரும்
விழலுக்கு
இறைத்த நீரும்
வீணாகிப் போகும்.

கலர் கலரா
காட்டினாலும்
கடைசி வரை நிழல்
கருப்பாகவே விழும்.

ஒரிஜினல் விரட்டினாலும்
உன் பின்னால் நிழல்
ஒட்டிக் கொண்டு
உறவாடும்.

கரிசனை கொண்டது போல்
காலடியில் தொடரும்.

இறுதியில்
இருளினைக் கண்டதும்
எங்கோ மறைந்து விடும்.

நிழல்
நினைத்தாலும்
முனைந்தாலும்
நிஜமாக முடியாது.

காலில் மிதிபடும்
கட்டெறும்புகளுக்கு
நிழல்
நிஜம் போல் தெரியலாம்.
காலம் கடந்த பின்பே
கண்துடைப்பு என்று
கட்டெறும்புகளுக்குப்
சற்றுப் புரியும்.

LEAVE A REPLY