மதினா தாக்குதல்: 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்கள் கைது

0
146

medina-mosque-bombமதினா நகரில் திங்கட்கிழமையன்று மஸ்ஜிதுன் நபவிக்கு அருகே நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்களை சௌதி அரேபியப் போலிசார் கைது செய்திருக்கின்றனர்.

தற்கொலை குண்டுதாரி 26 வயதான ஒரு சௌதிப் பிரஜை என்றும் அவர் போதை மருந்தை அதிகம் பயன்படுத்திய வரலாறு கொண்டவர் என்றும் சௌதி அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவர் மஸ்ஜிதுன் நபவிக்கு அருகே இருந்த ஒரு கார் நிறுத்துமிடத்தைக் கடந்து வந்து, தான் கட்டியிருந்த தற்கொலை குண்டு பெல்டை இயக்கி வெடிக்கச் செய்ததில் தான் சௌதி படையினர் கொல்லப்பட்டனர்.

அதே நாளில் சௌதி நகரான கத்திஃப்பில் வேறு இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. அந்த சம்பவங்கள் தொடர்பாக மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளை சௌதி அதிகாரிகள் அந்தக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியர்வகள் என்று கூறியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

ரமலான் மாத நோன்புக் காலத்தின் இறுதிப்பகுதியில் இந்த சம்பவங்கள் நடந்தன.

#BBC

LEAVE A REPLY