அரச கரும மொழிகளை அமுலாக்க வரவு செலவுத் திட்டத்தில் தனியான ஒதுக்கீடு

0
381

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Budget 2017இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் வரவு – செலவுத் திட்டத்தில் அரச கரும மொழிகள் அமுலாக்கத்திற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேசிய கலந்துரையாடல், சக வாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் இது தொடர்பாக அமைச்சரவையில் முன் வைத்த யோசனைக்கே அமைச்சரவை இந்த ஓப்புதலை வழங்கியுள்ளது.

அரச கரும மொழி அமுலாக்கத்திற்கு என அமைச்சுக்களுக்கு தனியாக ஓதுக்கீடு செய்யப்படும் இந்நிதி மூலம் தமிழ் மொழி அமுலாக்கத்தில் முன்னேற்றத்தை எட்ட முடியும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் அரசியலமைப்பில் தேசிய மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி இணைப்பு மொழியாக கூறப்பட்டுள்ளது.

அரச கரும மொழிகளை பொறுத்தவரை அது தொடர்பான மொழித் தேர்ச்சியுடைய அரச சேவையாளர்கள் போதியளவு இன்மையால் அரச கரும மொழிகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக நடைமுறைச்சிக்கல்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

குறிப்பாக மொழி தொடர்பாடல் விடயத்தில் கூடுதலாக தமிழ் பேசும் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள்.

இந்த விடயத்தில் தங்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவே தமிழ் பேசும் மக்களாகிய தமிழர்களும் முஸ்லிம்களும் உணருகின்றார்கள்.

அமைச்சுக்கள் திணைக்களங்களிலிருந்து கூடுதலான கடிதங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு சிங்களத்திலே கிடைத்து வருவதாக தமிழ் பேசும் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் குற்றம் சாட்டுகின்றன.

அமைச்சரவையால் வழங்கப்பட்ட ஒப்புதலின்படி 2020ம் ஆண்டு தொடக்கம் பிரஜையொருவர் அரச நிறுவனமொன்றில் தான் விரும்பும் மொழியில் தனக்கான தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY