(Poem) செல்பிக் கிளிகளாம் பள்ளியிலே….

0
27

Selfie in Masjid 1(Mohamed Nizous)

செல்பிக் கிளிகளின் பேஷ் புக்கிலே
சிம்பஞ்சும் எடிட் பண்ணி லைக் பெறுமாம்
சில கண்மணிகள் செல்பி சைக்கோவானார்.

படுத்த படுக்கை கிடக்கும் நிலையில் எடுப்பார் சிலபேர் செல்பி செல்பீ
எடுத்த உடுப்பை உடுத்துக் காட்டி எடுப்பார் பல பேர் செல்பி செல்பீ
கொடுத்த தருமம் பிடித்துக் காட்ட எடுக்கும் செல்பி சரியா அம்மா
அடுத்து அடுத்து போடும் செல்பி கடுப்பைத் தருமாம் மூஞ்சி நூலில்
சில கண்மணிகள் செல்பி சைக்கோவானார்.

எண்ட காரு இங்க பாரு என்று எடுப்பார் செல்பி செல்பீ
உண்ட சோற்றில்
உள்ள லெக் பீஸ்
உயர்த்திக் காட்டி செல்பீ செல்பீ
தண்ட வாள செல்பீ அடித்து
துண்டமாகும் அவலம் இங்கு
இந்த நோய்கள் என்று தீரும்
நொந்து பாடும் பாடல் இது
சில கண்மணிகள் செல்பி சைக்கோவானார்.

LEAVE A REPLY