பரீட்சைகள் திணைக்களம் அதிக திருடர்கள் உள்ள இடமாகும் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

0
99

CHANDRIKA_KUMARATU_2537679fநிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தின் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் இன்று நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

கல்வி அமைச்சர் அறிந்துள்ளாரா என்பது தொடர்பில் எனக்குத் தெரியவில்லை. இங்கிருந்து அவர் அதனை அறிந்துகொள்வார். பரீட்சைகள் திணைக்களம் அதிக திருடர்கள் உள்ள இடமாகும். எனது வார்த்தைகளை என்னால் குறைக்க முடியாது அல்லவா? இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தற்போதைய அரசாங்கம் கல்விக்கான நிதியை 5 மடங்கில் அதிகரித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில், ராஜபக்ஸ அரசாங்கம் 1.3 வீதத்தையே கல்விக்காக ஒதுக்கியிருந்தது.

-NF-

LEAVE A REPLY