சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு

0
24

201607071416394949_how-to-make-chettinad-mutton-kulambu_SECVPFதேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 3
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

மசாலா பொருட்கள் :

பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
சோம்பு – 1 டீஸ்பூன்

செட்டிநாடு மசாலா பொடிக்கு :

வரமிளகாய் – 6
மல்லி – 4 டேபிள் ஸ்பூன்
பட்டை – 5 செ.மீ
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 1

தேங்காய் மசாலாவிற்கு :

தேங்காய் – 1 கப்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, ‘செட்டிநாடு மசாலா பொடிக்கு’ கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா பொருட்களை போட்டு தாளித்த பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7 விசில் விட்டு, குறைவான தீயில் 20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து, இறக்கவும்.

* பிறகு குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி.

LEAVE A REPLY