எடை அதிகமான பேட்டுக்கு தடை

0
130

201607071825342411_Hazlewood-backs-Pontings-call-for-big-bat-ban_SECVPFஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், பேட்ஸ்மேன்கள் அதிக அளவு எடை மற்றும் தடிமன் கொண்ட பேட்டை பயன்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்து அடுத்த வாரம் எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியில் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவரது கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சில பேரின் கிரிக்கெட் பேட் நம்ப முடியாத அளவில் அதிக எடையுடன் இருக்கிறது. குறிப்பாக வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோரின் பேட் அதிக எடையுடன் காணப்படுகிறது. இதனால் பாண்டிங்கின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

ஒருநாள் கிரிக்கெட் கொஞ்சம் வித்தியாசமானது. ரசிகர்கள் கூட்டம் பவுண்டரி மற்றும் சிக்சர்களை பார்க்கத்தான் மைதானத்திற்குள் வருகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பாண்டிங்கின் கருத்து மிகவும் சிறந்ததாகும்’’ என்றார்.

கிரிக்கெட் விதிமுறையின் படி ஒரு குறிப்பிட்ட நீளம் மற்றும் அகலத்தில்தான் பேட்டை வைக்க வேண்டும் என்று உள்ளது. பேட்டின் எடை மற்றும் தடிமனை கட்டுப்படுத்த விதியில் கூறப்படவில்லை.

LEAVE A REPLY