பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் ஒன்று

0
496

2541585976.சீனா 8.82

இந்தேனேசியா 3.22

பிலிப்பைன்ஸ் 1.88

வியட்நாம் 1.83

இலங்கை 1.59

தாய்லாந்து 1.03

எகிப்து 0.97

மலேசியா 0.94

நைஜீரியா 0.85

பங்களாதேஷ் 0.79

தென்னாபிரிக்க 0.63

இந்தியா 0.60

அல்ஜீரியா 0.52

துருக்கிய 0.49

பாகிஸ்தான் 0.48

பிரேஸில் 0.47

பர்மா 0.46

மொரோக்கோ 0.31

வடகொரியா 0.30

அமெரிக்கா 0.28

ஐக்கிய அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிஸ்னஸ் டைம்ஸ் சஞ்சிகை மேற்கொண்ட ஓர் ஆய்வில், உலகில் பெருமளவு பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கடலில் வீசும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது. முதல் 20 நாடுகள் 80 வீதமான (உலகின்) கழிவுப் பொருட்களை கடலில் சேர்க்கின்றன. அவற்றின் அளவு 13 டொன் என கணிப் பிடப்பட்டுள்ளது.

இவ்வாய்வின்படி ஒவ்வொரு சராசரி இலங்கையரும் 5.1 கிலோ பிளாஸ்டிக் போத்தல்களை கடலில் சேர்க்கின்றனர். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட் நாம், சீனா போன்ற நாடுகள் இவ்வாய்வில் முன்னணியில் உள்ளன. சீனாவே உலகில் ஆகக் கூடுதலான பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் சேர்க்கின்றது. அங்கு சராசரியாக ஒரு பிரஜை 8.2 கி.கி. பிளாஸ்டிக் கழிவு களை கடலில் சேர்க்கின்றான்.

இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் 0.299 கி.கி. பிளாஸ்டிக் கழிவுகளை முறை கேடாகப் பயன்படுத்துகின்றனர். நாளொன் றுக்கு 516368 கி.கி. பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இலங்கையின் சுற்றாடல் அதிகாரிகள் இக்கணிப்பீடு சர்ச் சைக்குரியது என தெரிவித்துள்ளபோதும், சுற்றாடல் அதிகார சபை தமது செயற் பாடுகளை இன்னும் வினைத்திறனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதில் கருத்தொரு மைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிளாஸ்டிக்கை ‘நெகிழி’ என்று தமிழில் அழைக்கின்றனர். தமிழக சூழலில் சவ்வுத் தாள் எனவும் இது அழைக்கப்படுகின்றது. பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் கழிவுகள் மக்குவதில்லை. அழுகுவதுமில்லை. ஓரி டம் விட்டு இன்னொரு இடத்திற்குப் பரந் தாலும் மண் மேல் ஒட்டிக் கிடந்து மழை நீரை உள் இறங்கவிடாமல் தடுக்கின்றன.

பேரூந்துகளில், பஸ் தரிப்பிடங்களில், ரயில் நிலையங்களில், பொது இடங்களில் அருந்தி விட்டு வீசியெறியும் பிளாஸ்டிக் போத்தல்கள் கடந்த பத்தாண்டுகளில் வெள்ளம் போல் பெருகி வருவதைக் காண லாம். கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான சுமார் 160 கி.மீ. தொலைவில் பாதையின் இரு மருங்கிலும் பிளாஸ்டிக் போத்தல்கள் குவிந்து கிடக்கின்றன. கண்டி-கொழும்பு வீதியில் வீதியை குறுக் கறுத்து ஓடும் ஆறுகளில் மரம் வளர்ந்தி ருக்கும் பகுதிகளில் எண்ணற்ற பிளாஸ்டிக் போத்தல்களும் பொலித்தீன் பைகளும் குவிந்து கிடக்கின்றன.

யாருக்கு மரணம் உண்டோ இல்லை யோ பிளாஸ்டிக் போத்தல்களுக்கும் பொலித்தீன்களுக்கும் மரணம் இல்லாப் பெரு வாழ்வு உண்டு. இயற்கை அளிக்கும் மழைநீர் பூமிக்குள் செல்வதை பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் தடுக்கின்றன. காகிதங் கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள் ளிட்ட கழிவுகளை பூமியில் போட்டால் அவை பூமியை விட்டு நீங்க ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகும்.

பிளாஸ்டிக் கேன்கள் மக்குவதற்கு 80 முதல் 200 ஆண்டுகள் செல்கின்றன. பிளாஸ்டிக் பைகளைப் போட்டால் 50 முதல் 100 ஆண்டுகளும் பிளாஸ்டிக் போத்தல்கள் மக்குவதற்கு 1 மில்லியன் ஆண்டுகளும் செல்கின்றன.

இலங்கையில் கடந்த பத்தாண்டில் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் பெரு மளவு பரிமாறப்படுகின்றது. பத்து ஆண்டு களுக்கு முன்னர் மிக அபூர்வமாகவே தண்ணீர் போத்தல்களை காணக் கிடைத்தன. இன்று சர்வ சாதாரணமாக எல்லா இடங் களிலும் அருந்திவிட்டு வீசப்படும் வெற்று போத்தல்கள் மலை போல் குவிந்திருப்பதைக் காணலாம். இலங்கையின் நகர பஸ் தரிப்பு நிலையங்கள் இதற்கு சிறந்த உதாரணம். பஸ் தரிப்பு நிலையங்கள் மட்டுமன்றி, பயணப் பேரூந்துகளின் இரண்டு பக்கங்களிலுமுள்ள கம்பித் தட்டில் எக்கச்சக்கமான பிளாஸ்டிக் போத்தல்கள் குவிந்து கிடக்கின்றன.

பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப் பட்ட நீரை அருந்துவது உடலுக்கு தீங் கானது என்பது மருத்துவ ரீதியில் நிரூ பிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை விற் பனை செய்வதற்கான உரிமத்தை சுகாதார அமைச்சே வழங்கியுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை தொழிற்சாலை களில் உற்பத்தி செய்யும்போதும் மறுசுழற்சி செய்யும்போதும், அவை உருகும் போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையன. சுவாசிக்கின்ற ஊழியர் கள், அருகில் வசிக்கும் மக்கள் தோல் நோய் முதல் புற்று நோய் வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத் தளர்ச்சி, ரத்த சிறுநீரகச் செயல் குறைபாடு, நோயெதிர்ப்பு ஆற்றல் குறைபாடு போன்ற பல்வேறு தாக்கங்கள் உண்டாகின்றன. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் டயொக்ஸின் எனும் நச்சுப் புகை வெளிவருகின்றது. அது உடல் ஆரோக்கியத்திற்கு மிக ஆபத் தானது. பொலித்தீன் உறைகளால் சுத்தப் பட்டு வரும் உணவுப் பொருட்களான சொக்லெட், பால்கோவா போன்றவற்றில் பொலித்தீன் வேதிப்பொருளான பென்சின் வினை குளோ ரைட் கலந்து விடுகின்றது. இதனால் புற்றுநோய் கூட ஏற்படலாம் என எச்சரிக் கப்படுகின்றது.

எளிதில் மக்காத, சிதையாத பிளாஸ்டிக் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சாக் கடைகள், வாய்க்கால்களில் அடைப்பு ஏற் பட்டு, தேங்கி, துர்நாற்றம், நுளம்புப் பெருக்கம், நோய்கள் ஏற்படுகின்றன. நீர் வரத்துக் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் மழைக் காலங்களில் வெள் ளப் பெருக்கு ஏற்படுகின்றது.

மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் வேளா ண்மை நிலங்களில் தங்கி, அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகின்றது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கின்றது. கடற்கரையோரம், கடலில் எறியப்படும் பிளாஸ்டிக் பொருட் கள் கடல் வாழ் உயிரினங்களுக்கும் வனப் பகுதியில் வீசப்படுபவை வன விலங்கு களுக்கும் தீங்கு விளைவிக்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்ப தற்கு இதை விட வலுவான காரணங்கள் தேவையில்லை. இலங்கையின் புதிய ஜனா திபதி சுற்றாடலைப் பாதுகாத்தல் தொடர் பான மிக கறாரான நிலைப்பாடுகளை எடுப்பதாகக் கூறி வரும் தருணத்திலேயே பிஸ்னஸ் டைம்ஸ் இலங்கைக்கு சுற்றாடலை மாசுபடுத்தும் நாடுகளின் தர வரிசையில் 5 ஆம் இடத்தை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY