சச்சின் டெண்டுல்கருக்கு லண்டனில் மூட்டு அறுவை சிகிச்சை

0
158

sachinஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு லண்டனில் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சச்சின் டெண்டுல்கரின் இடது காலின் மூட்டுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவை தொடர்ந்து வலியை ஏற்படுத்தி வந்ததால், அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த புதன்கிழமை, சச்சின் டெண்டுல்கரின் வலது காலின் மூட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்தது, தொடர்ந்து ஓய்வில் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட காலின் புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

LEAVE A REPLY