வங்காளதேசத்தில் குண்டு வெடித்து போலீஸ்காரர் பலி: 11 பேர் படுகாயம்

0
157

201607071101106507_Bomb-blast-in-Bangladesh-One-policeman-killed_SECVPFவங்காளதேச தலைநகர் டாக்காவில் சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை குண்டு வெடித்தது.

டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கிஷோர் கஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை ரமலான்  தொழுகை நடந்து கொண்டு இருந்தது. தொழுகை நடந்த மைதானத்துக்கு செல்லும் வழியில் நுழைவு வாயில் உள்ளது. இதன் அருகே இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மேலும் இந்த சம்பவத்தில் 6 போலீஸ்காரர்களும், பொதுமக்கள் 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY