தைவானை மிரட்டும் பயங்கர புயல்: வானிலை எச்சரிக்கை

0
153

201607071049070216_Taiwan-on-high-alert-as-storm-approaches_SECVPFசீனா அருகே உள்ள தைவான் தீவு நாடாகும். இதன் அருகே 870 கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கர புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் சூப்பர் புயல் என அழைக்கப்படும் அதிசக்தி கொண்டது. தைவானை நோக்கி புயல் முன்னேறி வருகிறது. இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை தைவானை புயல் தாக்கக்கூடும் என வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 250 கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கர சூறைக்காற்று வீசும், கடல் கொந்தளிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் அங்குள்ள ஹவுலியன் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. எனவே ஹவுலியன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பலத்த பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதால் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் கரையை கடக்கும்போது பயங்கர சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படாலாம் என அஞ்சப்படுகிறது. எனவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், பெரும் பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY