காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை

0
100

(விசேட நிருபர்)

5acbd167-d42c-4f32-902a-cafaac592547மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள பொதுச் சந்தைக்கு முன்னால் நேற்று (6.7.2016) புதன்கிழமை இரவு சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

சிறுத்தையொன்று இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து காத்தான்குடி பொலிசார் ஸ்த்தளத்திற்கு விரைந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்தியதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மக்கள் சனக் கூட்டம் அதிகமாக நடமாடும் இப்பிரதேசத்திற்கு இந்த சிறுத்தை எவ்வாறு வந்தது தொடர்பிலும் சிறுத்தை இறந்தது தொடர்பிலும் பொதுமக்களிடம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற் கொண்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடாத்தி வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சிறுத்தை உணவு தேடி நகருக்குள் வந்து பிரதான வீதியைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்திருக்க கூடுமமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7f56fb36-42e9-44c5-a5c6-6c6be1fc7dbc

b9ae7766-7e01-4ffc-86b8-735a7d44767d

LEAVE A REPLY