(Photo) தோப்பூர் பள்ளிவாயலில் ஒருவர் வெட்டிக் கொலை

0
221

(விஷேட நிருபர்)

Murder_titleமூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப் பள்ளிவாசலில் வைத்து 3 பேர் கொண்ட குழுவினரால் ஆஸாத் நகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (07) காலை 6.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என தெரிய வந்துள்ளது. குறித்த நபர் நோன்பு நோற்றிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

குறித்த சம்பவத்தில் இன்று உயிரிழந்த நபர் அவரது மைத்துனரை கட்டுத் துவக்கினால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூதூர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மூன்று மாதத்திற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையிலையே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பத்தில் உயிரிழந்தவரின் மைத்துனர் உட்பட மூன்று நபர்களை மூதூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Thoppur Murder

LEAVE A REPLY