நாடு முழுவதிலும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டாடியபோதிலும் நாம் ஒற்றுமைப்படத் தவறிவிட்டோம்: மர்சூக் அஹமட்லெப்பை ஆதங்கம்

0
151

(எம்.ஐ. அப்துல் நஸார்)

Marzook Ahamed Lebbe“நாடு முழுவதிலும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டாடியபோதிலும் நாம் ஒற்றுமைப்படத் தவறிவிட்டோம்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் கத்தான்குடி நகரசபையின் நகரபிதாவுமான மர்சூக் அஹமட்லெப்பை தெரிவித்தார்.

நோன்புப் பெருநாள் தொழுகையினை உள்நாட்டு மற்றும் சர்வதேச பிறையினை பின்பற்றும் மார்க்கப் பிரச்சார அமைப்புக்கள் ஒரே நாளில் நிறைவேற்றியிருந்தன. ஆனால் அவை தத்தமது தொழுகையினை ஒரு பிரதேசத்தின் வெவ்வேறு இடங்களில் நிறைவேற்றியது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

“பொதுவாக உள்நாட்டு மற்றும் சர்வதேச பிறை அடிப்படையில் அமைந்த பெருநாட்கள் ஒரு நாள் முன் பின்னாக கொண்டாடப்படும். உள்நாட்டு பிறையினை பின்பற்றுவோர் நோன்பு நோற்றிருக்க சர்வதேச பிறையினை பின்பற்றுவோர் பெருநாள் கொண்டாடுவர். ஆனால் அல்லாஹ்வின் உதவியால் இம்முறை இரு பிரிவினருக்கும் பொதுவான ஒரே தினத்தில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பம் அனைவருக்கும் கிடைத்தது.

ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு என்பன பற்றி பிரச்சாரம் செய்யும் மார்க்கப் பிரச்சார அமைப்புக்கள் தமக்குக் கிடைத்த உன்னதமான சாந்தர்ப்பத்தை பயன்படுத்தத் தவறிவிட்டன. இதன் மூலம் மார்க்கப் பிரச்சார அமைப்புக்களின் பிரச்சாரத்திற்கும் செயற்பாடுகளுக்கும் இடையே முரண்நிலை காணப்படுகின்றது. அவர்களினது உபதேசங்கள் ஊருக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளன. தங்களுக்காக அவற்றை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

நாடு முழுவதிலும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டாடியபோதிலும் நாம் ஒற்றுமைப்படத் தவறிவிட்டோம். நடந்து முடிந்த விடயங்களை மீள அலசுவதில் எவ்வித பியோசனமும் இல்லையென்றாலும், எதிர்காலத்திலேனும் எமக்கிடையிலான கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு எமது சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முயற்சிக்க வேண்டும்” என கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY