(Poem) பைக் & பைத்தியம்

0
31

(Mohamed Nizous)

motorbike maxres defaultபைக்கை ஓடுற சிலபேர்
கைக்க சொறிச்சல் போல
முறுக்கிற முறையைப் பார்த்தால்
கிறுக்கு என்றே தோணும்.

இடுப்புக்கு உயர்ந்த பைக்கில்
கடுப்பு எடுத்தவன் போல
ஓடுற ஓட்டத்தைப் பார்க்க
ரோடே வெறுக்குது பலர்க்கு.

லைசன் எடுக்கவும் இல்லை
பொய்சன் குடித்தவன் போல
ஓவர் ஸ்பீட்டில் போகிறார்
பாவம் எக்ஸிடண்ட் ஆகிறார்.

ஹோர்ணை அடித்துப் பிடிக்கும்
ஈனச் செயலை பெருமையாய்
செய்யும் செயலைப் பார்க்க
ஐயா வெறுப்புத் தோன்றும்.

ஹெண்டிலை வெட்டி ஓட்டியது
பெண்டில வேகமாய்த் திருப்பியது
பெண்டேஜ் போட்டு படுக்கையில்
நண்டாய் மனதை கிள்ளும்

கலர்ஸாய் ஓட நினைத்து
கடைசியில் எலும்பு உடைந்து
பழசாய் பாயில் கிடக்கும்
பலரையும் நினத்து ஓட்டு.

LEAVE A REPLY