அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் விலகல்

0
27

imageகோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சிலி அணியிடம் தோற்று அர்ஜென்டினா கோப்பையை இழந்தது. கடந்த ஆண்டும் இறுதிப்போட்டியில் சிலியிடம் தோற்று இருந்தது. இதனால் அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்த நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் ஜெரால்டோ மார்ட்டினோ (வயது 53) பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்து அனுப்புவதில் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளப்புகள் தங்களிடம் உள்ள வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப விரும்பாததால் பயிற்சியாளர் மார்ட்டினோ கடும் விரக்தியில் இருந்ததாகவும், அணியில் தற்போது 9 வீரர்கள் மட்டுமே இருப்பதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற காரணங்களால், அர்ஜென்டினா ஒலிம்பிக் கமிட்டி தலைவர், அணியை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பாமலும் இருக்கலாம் என தெரிகிறது.

LEAVE A REPLY