மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தடை

0
131

imageஆஸ்திரேலியாவில் நடைபெறும் பெண்களுக்காக பிக் பாஸ் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் ஹேய்லே ஜென்சன், கோரின் ஹால் ஆகிய இரண்டு வீராங்கனைகளும், கிரிக்கெட் போட்டி தொடர்பான சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஹேய்லே ஜென்சன் நவம்பர் மாதம் நடைப்பெற்ற ஆஸ்திரேலியா-நியூசிலாந்து(ஆண்கள்) டெஸ்ட் போட்டி தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் தொடரை வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டதை கோரின் ஹால் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து ஹேய்லே ஜென்சன், கோரின் ஹால் ஆகிய இருவருக்கும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு பெற இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா ஆண்கள் அணியில் விளையாடிய ஜோயல் லோகனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் இந்தியாவில் நடைப்பெற்ற டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

தடை விதிக்கப்பட்டுள்ள மூவரும் ’கிரிக்கெட் ஆஸ்திரேலியா’ நடத்தும் ஊழல் எதிர்ப்பு வீரர் கல்வி வகுப்புகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY