ஸ்ரெலிங் பவுண்ட்டின் பெறுமதி வீழ்ச்சி

0
125

Pound_CIபிரித்தானியாவின் ஸ்ரெலிங் பவுண்ட்டின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த வாக்கெடுப்பின் பின்னர் பாரியளவில் பவுண்ட்டின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கின்றது.

ஆசிய வர்த்தக நடவடிக்கைகளிலும் பவுண்ட்டின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
31 ஆண்டுகளில் அமெரிக்கு டொலருக்கு எதிரான பவுண்டின் பெறுமதி பாரிய வீழ்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பவுண்டின் பெறுமதி 1.2798 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாகியுள்ள நம்பிக்கையீனமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பிரிடெக்ஸ் காரணமாக பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிதிச் சந்தைகளில் ஒர் நம்பிக்கையற்றதன்மை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY