கிழக்கின் எழுச்சி மக்களின் புரட்சி அல்ல பதவிக்கான முயற்சி….?

0
204

(வை.எம்.பைரூஸ்)

SLMC Logoஇன்று கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பெரும் பாலான ஊடகங்கலில் பேசு பொருளாக ஆக்கப்பட்டு அரசியல் வாதிகள்,படித்தவர்கள் பாமார மக்கள் என அரசியல் சார்ந்த அனைவரின் கவனத்தையும் ஒரே கணம் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கும் விடயம் தான் கிழக்கின் எழுச்சி ஆகும்.

கிழக்கின் எழுச்சி என்றால் என்ன….? என்ற கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்னர் இந்த கிழக்கின் எழுச்சியை தூண்டி விட்டு புதுனம் பார்ப்பவர்களின் நிலையானது புள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற நிலையாகத்தான் இருக்கின்றது.

இவர்கள் வேறு யாருமில்லை அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெயரினால் பதவிகளால் மாத்திரமே அலங்கரிக்கப்பட்டு இருந்த கை பொம்மைகள் இன்று அந்த பதவிகள் கை நளுவியிருக்கின்ற சூழ் நிலையில் அதனை சகித்துக் கொள்ள முடியாததால் மக்களாலும் தாம் அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டு அரசியலிலிருந்து ஓய்வு பெரும் நேரம் வரும் போது தலைமைத்துவத்தின் மீது தனிப்பட்ட ரீதியில் இருந்த காழ்ப்புணர்வை திட்டமிட்டு திணிக்க முற்படுவதே இந்த கிழக்கின் எழுச்சியாகும் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அவர்களின் நப்பாசைக்கு பகடைக் காயக்கப்பட்டவர்தான் கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா பாரூக். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் மரணத்துக்கு பிற்பாடு இவரை அநேகருக்கு தெறிந்திருக்கவே வாய்ப்பில்லை என்று நினைக்கின்றேன். அந்த அளவுக்கு அரசியலில் எந்த வீத ஈடுபாடும் இல்லாமல் இருந்த ஒருவர், திடீர் என்று கிழக்கின் எழுச்சி கட்சியின் தலைமைத்துவம் கிழக்குக்கே மாற்றப்பட வேண்டும் என்ற வெற்று கோஷ மிட்டால் யாருக்குத்தான் வேடிக்கையாக இருக்காது…..?

ஆனால் இந்த வபா பாரூக் இந்த கிழக்கின் எழுச்சி என்ற கோஷத்தை ஊடகங்களுக்கு கொண்டு வருவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலியை சந்திதுள்ள உண்மையும் தற்போது கசிந்த வண்ணம் உள்ளது.

உண்மையில் ஓர் அரசியல் கட்சியின் தலைவரை தோற்கடித்து அப் பதவியை பெறுவதென்பது சாதரண விடயமல்ல. அதனை கட்சியின் செயலாளரோ தவிசாளரோ உயர் பதவியிலிருக்க கூடியவர்களோ தீர்மாணிக்கவும் முடியாது என கடந்த காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தேசிய பட்டியலை நம்பி ஏமாற்றப்பட்ட வை.எல்.எஸ்.ஹமீட்டிலிருந்து நாம் படிப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு அரசியல் வாதியை தோற்கடிப்பதோ அவரை அரசியலில் இருந்தது ஓய்வு பெறச் செய்வதோ அரசியல் கட்சி அல்ல மாறாக அதனை பொது மக்களாகிய நாமே தீர்மானிக்க வேண்டும், அதற்கு உதாரணம் முன்னால் அதிபர் மஹிந்த ராஜ பக்ச வாகும் அவர் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டும் ஏதோ ஒரு வகையில் இன்று வரை நிலை குலையாமல் தனது அரசியல் வாழ்க்கையை தாக்கு பிடித்து கொண்டு போவதற்கு முக்கிய காரணேம் அவருடைய மக்கள் செல்வாக்கு இன்றும் ஏதோ ஒரு மூலையில் தங்கிக் கிடப்பதே.

இலங்கை வாழ் முஸ்லிம் அரசியல் வாதிகளில் யாருக்கும் இல்லாத ஓர் தனிச் சிறப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுூப் ஹக்கிமிடம் இருக்கின்றது, அது அகில இலங்கை ரீதியில் எந்த மாவட்டத்தில் அவர் போட்டியிட்டாலும் அல்லாஹ்வின் உதவியுடன் அவரால் வெற்றியை தனதாக்கிக் கொள்ள முடியும் இது கட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள பற்றோ அல்லது தலைவரின் சாணக்கியத்துக்கு கிடைக்கும் வெற்றியோ என்பதை என்னால் திணித்து கூற முடியாது…..?

எது எதுவாக இருந்தாலும் கிழக்கின் எழுச்சியில் தற்போது நாளுக்கு நாள் இக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற பலர் இணைந்த வண்ணமே உள்ளனர் இவர்களால் தலைமைத்துவத்தை கிழக்கிற்கு கேட்பதற்கு முன்னர் அந்த தலைமைத்துவத்துக்கு யார் தகுதியானவர் இருக்கின்றார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்…….?

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ரவூப் ஹக்கீமை கட்சியில் இணைந்து கொண்டமைக்கான காரணம் அவரின் மக்கள் செல்வாக்கோ பொருளாதார வசதியோ அல்ல மாறாக அவரின் ஆளுமையும் மொழித்திறனுமே.. ஏனெனில் மும்மொழிகளும் சரளமாக பேசுவதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கின்றது. அதற்கா நான் மும் மொழிகளிலும் ஆற்றல் உள்ளவர்கள் கிழக்கில் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் தற்போதய அரசியல் வாதிகளில் அதனை வைத்து சாதிப்பதற்கான அனுபவமும் சாணக்கியமும் அவர்களிடம் இல்லை என்பதே அவர்களுடைய அரசியல் வாழ்க்கையிலிருந்து நாம் அடைந்திருக்கின்ற நிதர்சனமான உண்மையாகும்.

கட்சி என்பது மக்களின் உரிமைக்காக போராடும் ஓர் குரலே தவிர மக்களை நல் வழியில் அழைக்கின்ற கலம் அல்ல, கட்சியிடமோ கட்சியின் தலைமையிடமோ நாம் மார்க்கத்தை எதிர் பார்க்க முடியாது. அதனை கொள்கையை மையப்படுத்தி மாத்திரமே இயக்க வேண்டும், என்றாலும் அதற்கு நாம் இஸ்லாமிய ஆட்சி முறையான நாட்டில்தான் பிறந்திருக்கு வேண்டும். அதற்காக சில மார்க்கம் சம்பந்த பட்ட பொடும் போக்கான விடயங்களை கண்டிக்காமல் விட்டு விடவும் முடியாது.

கிழக்கின் எழுச்சியை மக்கள் மயப்படுத்தி அதனை தேர்தல் மூலமாக மக்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்குமாக இருந்தால் அதனை ஜனநாயக முறையில் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மாறாக அதனை விட்டு ஊடகங்களை மையப்படுத்தியோ கலகங்களையும் அட்டூளியங்களையும் கட்டவிழ்த்து அதனை அடைய நினைத்தால் நிச்சயம் அது சதித்திட்டக்காரர்களுக்கு பகல் கனவாகவே அமையும். மாறாக கிழக்கின் எழுச்சியை மக்களின் புரட்சி என்பதை விட பதவிக்கான முயற்சியே என்று கூற முடியும்.

எவ்வாறாயினும் ரவுூப் ஹக்கிமை எதிர்க்கும் இன வாதிகளுக்கு இது சாதகமாகவே அமையும் ஆகவே அனைத்தின முஸ்லிம்களும் ஒன்றினைந்து இதனை முறியடிக்க வேண்டும் அதுவே எம் மார்க்கத்துக்கும் இனத்துக்கும் ஆரோக்கியமாகும்.

LEAVE A REPLY