(Poem) கடற்கரைத் தொழுகை

0
16

(நிஷவ்ஸ்)

கடற்கரையில் தொழுவார்
நடக்கிற குத்பாவில்
நடுவில் நின்று
கிடைக்கிற கெப்களில்
அடிக்கடி கமராவால்
படங்களை சுடுவார்.
அடிக்கிற வெய்யில்
ஆக்ரோசமாய் இருந்தும்
முடிக்காமல் குத்பாவை
முழுசாய் ஓதுவதாய்
இடைக்கிடை சில பேர்
எழுந்தும் செல்வார்.
கொடுக்கிற ஸதகாவை
கெடுக்கிற மாதிரி
எடுக்கிற கூட்டம்
இடைஞ்சலும் செய்வார்.
நடக்கிற பாதையின்
நடுவிலே பைக்கை
தடுக்க பார்க் பண்ணி
கடுப்பைத் தருவார்.
உடுப்பைப் பற்றியும்
அடுப்படி பற்றியும்
எடுப்பாய் பேசுவார்
இன்னும் சில பெண்கள்.
இருந்தும் பல பேர்
இனிய நல் அமல்
புரிந்து இறையிடம்
புண்ணியம் தேடுவார்.

LEAVE A REPLY