(Photos) காத்தான்குடியில் பெருநாள் பசார் ஆரம்பித்து வைப்பு

0
57

(விஷேட நிருபர்)

DSCN7176காத்தான்குடியில் சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்று கூடல் பசார் இன்று (06) புதன்கிழமை கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவருமான கே.எல்.எம்.பரீட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்று கூடல் பசார் எதிர் வரும் 08.07.2016 வெள்ளிக்கிழமை இரவு வரை நடைபெறுமெனவும் இதற்கு பெண்கள் வருவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் செயலாளர் எம்.ஏ.எம்.இர்பான் தெரிவித்தார்.

இந்த ஒன்று கூடல் பசாரை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் செயாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

DSCN7171 DSCN7172 DSCN7178 DSCN7184

LEAVE A REPLY