பெருநாள் சதகாவாக 167,440.00 ரூபாய் பெறுமதியுடைய தங்க பிஸ்கட்: ஓட்டமாவடி பெருநாள் திடலில் சம்பவம்

0
577

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

IMG_4657கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை இன்று (06) காலை 6.20 மணிக்கு செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையினையும், குத்பா பேருரையினையும் ஜமாஆத்தின் பொது தலைவர் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) நடாத்தினார்.

தொழுகையில் கலந்து கொண்டோரால் பெருநாள் நன்கொடைகளும் வழங்கப்பட்டிருத்தன. ஆண்கள் வேறாக பெண்கள் வேறாக தமது நன்கொடைகளை வழங்கி இருத்தனர்.

இதன் போது பெண்கள் பகுதியில் இருத்து தன்னை யார் என்று காட்டிக்கொள்ள விரும்பாத பெண்மனி ஒருவர் 167,440.00 ரூபாய் பெறுமதியுடைய தங்க பிஸ்கட் ஒன்றினை தமது பெருநாள் நன்கொடையாக வழங்கி இருப்பதாக கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் பொது தலைவர் ஏ.எல்.பீ.முஹம்மத் (காஸிமி) தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இச் செயற்பாட்டினை பார்க்கும் போது நபி முஹம்மத்(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் இவ்வாறே தமது பெருநாள் கொடைகளை தாங்கங்களாக வழங்கி இருந்திருக்கின்றார்கள் என்ற வரலாற்று உண்மையையும் பார்க்க முடிவதாக குறிப்பிட்டார்.

இம்முறை பெருநாள் நன்கொடை நிதியாக 327,950.00 ரூபாய் கிடைக்கபெற்றுள்ளதாகவும் இந்த தர்மத்தினை வழங்கிய அனைவருக்கும் ஜம்இய்யா சார்பில் தமது நன்றிகளை தெரிவித்தார்.

வரலாறு காணாத அளவில் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.

02 IMG_4617 IMG_4624 IMG_4652

LEAVE A REPLY