க.பொ.த. உயர்தர பரீட்சை; ஆகஸ்ட் 2ல் ஆரம்பம்

0
178

z_art-p19-reading_05072016_kaaகல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம். என்.ஜே புஷ்ப குமார தெரிவித்துள்ளார். இப்பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் மாதம் 27 வரை நடைபெறவுள்ளன. இப்பரீட்சையில் தோற்றும் 240,991 பாடசாலை பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் 74,614 தனிப்பட்ட பரீட்சாத்திகளினதும் அனுமதி அட்டைகள் அவர்களது முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளது அனுமதி அட்டைகள் கிடைத்தவுடன் எவ்வித தாமதமுன்றி பரீட்சாத்திகளிடம் அவற்றை கையளிக்குமாறு அதிபர்களிடம் பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட தினத்தில் விண்ணப்படிவங்களை அனுப்பி அனுமதி அட்டை கிடைக்காத தனிப்பட்ட பரீட்சாத்திகள் இருப்பின் தான் விண்ணபித்த விண்ணப்பபடிவத்தின் பிரதி, பரீட்சைக்காக செலுத்திய ரசீதின் பிரதி, பதிவு தபால் செய்த ரசீதின் பிரதி என்பவற்றையும் இணைந்து பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை ஏற்பாடு பிரிவிடம் சமர்ப்பித்து அனுமதி அட்டையை பெற்றுக்ெகாள்ள முடியும்.

அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிதிருத்தம் அல்லது வேறு திருத்தங்கள் செய்ய வேண்டுமாயின் பாடசாலை பரீட்சாத்திகள் அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் யூலை 15 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமென கேட்டுக்ெகாண்டுள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட்’ மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் இப்பரீட்சை 2204 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களாக இதுவரை 305 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 27000 பேர் பரீட்சை நடவடிக்ைககளுக்காக கடமையாற்றவுள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துக்ெகாள்ள வேண்டுமாயின் பாடசாலை பரீட்சை ஒருங்கிணைப்பு மற்றும் பரீட்சை பெறுபேறுகள் பிரிவின் 011 2784208, ,011 2784537,011 3188350 , 011 3140314 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அல்லது 011 2784422 என்ற தொலைநகல் ஊடாகவும் அல்லது பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற அவசர இலக்கத்தின் ஊடாகவும் தொடர்புக்ெகாள்ள முடியும்.

LEAVE A REPLY