பிரதி அமைச்சர் பைசால் காசீம் அவர்களின் பெருநாள் வாழ்த்து

0
391

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Faisal Cassimபுனித நோன்புப் பெருநாளில் சகல சமூகங்களுடன் ஒற்றுமையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதுடன் புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்ளத் திடசங்கற்பம் பூணுவோம் என சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“ஒரு மாதம் நாம் பசித்திருந்து இறை வணக்கத்தில் ஈடுபட்டது போல், இன்று கொண்டாடும் பெருநாள் தினத்திலும் இறைவனுக்குப் பொருத்தமில்லாத செயற்பாடுகளில் ஈடுபடாமலும் குடும்பத்தார் மற்றும் அயலவர்கள், சக சமூகத்தவர்களுடனும் மிகவும் அந்நியோன்னியமாகவும் ஒற்றுமையகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முஸ்லிமும் அயலவர்களை அவதானித்து அவர்களோடு ஒன்றிணைந்து ஒற்றுமையாக தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நோன்பின் முழு பலனும் நமக்குக் கிடைக்கும்.

உற்றார் உறவினரோடும் அயலவர்களோடும் இணைந்து கொண்டாடும் பெருநாள் சிறப்புற்று விளங்கவும். இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கும், உலகில் வாழும் முஸ்லிம்களுக்கும் புனித நேன்புப் பெருநாள் சிறப்பாக அமைய பிராத்திப்போம்.

இந்நாடு மூவின மக்களுடைய நாடு. இன, மத பேதங்களை மறந்து நாம் ஒன்றுபடுவதன் மூலம்தான் இந்த நாட்டை எம்மால் அபிவிருத்தி செய்ய முடியும்” என அவர் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY