மு.கா. பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் பெருநாள் வாழ்த்து

0
514

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Nizam Kariyappar 1

அல்லாஹ்வை அச்சம் கொண்டு, அவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, றமழான் மாதம் முழுவதும் நோன்பை நிறைவேற்றி விட்டு பெருநாளை கொண்டாடுகின்ற இவ்வேளையில் முஸ்லிம்கள் தூய்மைமிக்க ஒரு சமூகமாக மாறி, ஏனைய சமூகத்தவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வை பயந்து, அவனது உண்மையான அடியானாக மாற வேண்டும் என்கின்ற உயர்ந்த தத்துவார்த்தத்தின் பேரிலேயே நம்மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.
அப்படி ஒரு தூய்மையான நிலைக்குத் திரும்பி, அதன் ஊடாக பாவ மன்னிப்பையும் நரக விடுதலையையும் இலக்காகக் கொண்டு பயணிக்கும் அதேவேளை மாற்று சமூகத்தவர்கள் நம்மைப் பார்த்து வியக்கின்ற அளவுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். அதுவே முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டுள்ள பிழையான- தப்பபிப்பிராயங்களை களைந்து, நல்லபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழியேற்படுத்தும்.
அதன் மூலம் மாற்று சமூகத்தவர்களுடன் பரஸ்பரம் நல்லுறவையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீதான ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகளையும் நெருக்கடிகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்புகின்றேன். நாடு எதிர்பார்க்கின்ற நல்லிணக்கம், நிம்மதி, சமாதானத்திற்கு முஸ்லிம்களாகிய நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு இத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம். அதற்காக கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY