(Poem) பிரிய ரமளான் பிரிகிறது

0
22

Happy-Ramadan-Kareem-Quotes-Wishes-2015(மதியன்பன்)

ஒரு திங்கள் எங்களுடன் சேர்ந்திருந்து
ஒப்பில்லா இறையருளைக் கொய்து தந்த
பெருமை சேர் ரமளானே எமை விட்டுப்
பிரிகின்றாய் ! வேதனையில் துவளுகின்றோம்.
விருப்புடனே உன் வரவை ஏற்று நாங்கள்
விரதமெனப் பகலெல்லாம் பசித்திருந்தோம்.
இரு உலகும் வெற்றி வழி காட்ட வந்த
இணையில்லா ரமழானே சென்று வாராய்.

உன் வரவால் இல்லங்கள் இலங்கலாச்சு
உயர் பள்ளி வாயல்கள் செழிக்க லாச்சு.
இன்னல்கள் அத்தனையும் குறையலாச்சு.
இதயங்கள் இன்பத்துள் திழைக்கலாச்சு.
ஒன்றெனவே மக்களெல்லாம் வாழலாச்சு.
ஓரிறைவன் புகளெல்லாம் ஓங்கலாச்சு.
எண்ணில்லா அருள் தன்னை அள்ளித் தந்ந
இணையில்லா ரமழானே சென்று வாராய்.

செல்வர்கள் ஏழைகளுக் கீயும் நல்ல
சிறப்பான வாய்ப் பொன்றை எமக்களித்தாய்.
உள்ளங்கள் அமைதிபெறும் நன்மை பெற
ஒரு மாதம் நோன் பென்னும் விரதம் தந்தாய்
பொல்லாத ஆசைகளை ஒதுக்கி வாழும்
புத்துவகை உணர்வொன்றை எமக் களித்தாய்.
எல்லையில்லா இறையருளை அள்ளித் தந்த
இணையில்லா ரமழானே சென்று வாராய்.

LEAVE A REPLY