காத்தான்குடி பொலிஸ் பிரிவில் முச்சக்கர வண்டி விபத்து: மூவர் காயம்

0
265

(விசேட நிருபர் )

75dc03ff-d565-4877-b535-f655870c7a1eமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையிலுள்ள பிரதான வீதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் உட்டப மூவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இன்று(5.7.2016) செவ்வாய்க்கிழமை பிற்பகள் மட்டக்களப்பிலிருந்து ஆரையம்பதி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் ஆரையம்பதியிலிருந்து காத்தான்குடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான சிறுமி மற்றும் சிறுமியின் தந்தை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் இதில் காயமடைந்த பெண் ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற் கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

352f887b-240c-449e-bd9f-b20e807de3fc

a3d41d9a-072f-4883-b807-d1a0564ea21b

LEAVE A REPLY