பெருநாள் கால வீதி விபத்துகள்: காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

0
218

அன்புடையீர், السلام عليكم ورحمة الله وبركاته

கீழ்க்காணும் அறிவித்தலை தங்களது பள்ளிவாயல் இரண்டு அல்லது மூன்று தடவைகள் பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அன்புடையீர்,
السلام عليكم ورحمة الله وبركاته

பெருநாள் கால வீதி விபத்துகள் தொடர்பாக…

Kattankudy federation Accidentகடந்த காலங்களில் எமது பிரதேசத்திலும் எமது பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களிலும் பல வீதி விபத்துகள் ஏற்பட்டு, பல உயிர்கள் பரிதாபமாக இறந்துள்ளதை பொதுமக்களாகிய தாங்கள் அறிவீர்கள். இதற்கு பெரும் காரணமாக அமைவது இளைஞர்களின் பொறுப்பற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டும் விதமும், தலைக்கவசம் அணியாமை, போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவதுமேயாகும். இதன் காரணமாக பாதையில் பயணிக்கின்ற பாதசாரிகளுக்கு இடையுஸ்ரீறாகவும் அச்சுறுத்தலாகவும் அமைவதோடு, பல உயிர்களையும் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

எனவே, பெருநாள் காலங்களில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதாகமாக நடந்துகொள்ளுமாறும், தலைக்கவசத்தை தவறாது அணிந்து கொள்ளுமாறும், வீதி போக்குவரத்து விதிமுறைகளை பேணி நடக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், பெற்றோர்கள் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும், சாரதி அனுமதிப்ப்ததிரம் இல்லாத தங்களது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்க வேண்டாம் எனவும் வினயமாகக் கேட்டுக்கொள்கிள்றோம்.
جزاك الله خيرا

தலைவர் செயலாளர்,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.

LEAVE A REPLY