சீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலி

0
12

getty20_0தென் சீனாவில் அடை மழை கார­ண­மாக யங்ட்ஸி ஆறு பெருக்­கெ­டுத்ததால் 180 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 45 பேருக்கும் அதி­க­மானோர் காணாமல் போயுள்­ளனர்.

மேற்­படி வெள்ள அனர்த்­தத்தால் 7 மாகா­ணங்­களைச் சேர்ந்த 33 மில்­லியன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும் அங்கு புகை­யி­ரதப் பாதை­களும் வீதி­களும் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. கயி­ஸொயு மாகா­ணத்தில் இடம்­பெற்ற மண்­ச­ரிவால் மட்டும் 23 பேர் உயிரி­ழந்­துள்­ளனர்.

வுபேயி மாக­ாணத்­தி­லுள்ள வுஹான் நகரில் சுவ­ரொன்று இடிந்து விழுந்­ததில் 8 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தில் நாளை புதன்­கி­ழமை வரை அடை மழை தொடரும் அபாயம் நிலவுவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

getty18_0

LEAVE A REPLY