புவி வெப்பமயமானதால் நீர்மட்டம் உயர்வு: பசிபிக் கடலில் மூழ்கிய 5 தீவுகள்

0
119

201607051039255056_Pacific-Ocean-headed-for-normal-radiation-levels_SECVPFகாற்றில் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வாயு கலப்பதால் மாசு ஏற்பட்டு புவி வெப்பமயமாகி வருகிறது. இதனால் பருவநிலை மாற்றம் எற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் கடலில் நீர் வெப்ப மயமாகிறது. அதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தென் பசிபிக் கடல் பகுதியில் இருந்த 5 சிறிய தீவுகள் கடலில் மூழ்கி விட்டன.

மேலும் 6 தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. இத்தகவல் ஆஸ்திரேலியாவின் சி.எஸ். ஐ.ஆர்.ஓ நிறுவனம் மற்றும் சீன கடல் பல்கலைக் கழகத்தினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடல் நீர் வெப்பமயமாவதால் பசிபிக் கடல் பரப்பை விட இந்திய பெருங்கடலின் பரப்பளவு அதிகரித்து வருவதாகவும், ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் வழக்கத்தை விட மழை அளவு அதிகரித்து இருப்பதாகவும், கிழக்கு ஆசியாவில் மழை அளவு குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY