விபத்தில் வபாத்தான காத்தான்குடி ஷியாம் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல்

0
131

Buhari Siyam 1மட்டக்களப்பு – பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்தியாய எனுமிடத்தில் கடந்த புதன்கிழமை (ஜுன் 29, 2016) மாலை 6.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நால்வரில் ஒருவர்பின் ஒருவராக அன்றைய தினமே மூவர் மரணித்திருந்தனர்.

படுகாயமடைந்த நிலையில் பொலொன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாலாமவரான முஹம்மத் ஷியாம் (வயது 26) என்பவர் பொலொன்னறுவை வைத்திய சாலையில் நேற்று வபாத்தானார்.

இந்நிலையில் அவரது ஜனாஸா, இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-3, முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY