காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியது

0
141

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

IMG_0004மட்டக்களப்பு, கல்லடிப் பாலம் அருகில் காணாமல்போன மட்டக்களப்பு, கூழாவடி பகுதியை சேர்ந்த சின்னராசா சீயோன் (19 வயது) இளைஞனின் சடலம் செவ்வாய்க்கிழமை காலை (ஜுலை 05, 2016) சின்ன உப்போடை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லடி பழைய பாலம் அருகில் துவிச்சக்கர வண்டி ஒன்று அநாதரவாக உள்ளதை தொடர்ந்து அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. மீனவர்களும் கடற்படையினரும் இணைந்து இந்த தேடுதலை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த இளைனின் சடலம் சின்ன உப்போடை கப்பலேந்திய மாதா ஆலயத்திற்கு அருகாமையில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_0002 IMG_0008 IMG_0011

LEAVE A REPLY