(Video) மஸ்ஜிதுன் நபவி அருகே தற்கொலைத் தாக்குதல்: 4 பேர் பலி

0
33

medina-mosque-bombசவுதி அரேபியா- மதினா மஸ்ஜிதுன் நபவி அருகே தற்கொலைப் படை குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

வாகனம் வெடித்து சிதறியதற்கான வீடியோ பதிவு ஒன்றினை அந்நாட்டின் அல்-அரேபியா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இக்குண்டுத் தாக்குதலில் 4 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக, காடிஃப் நகரில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. காடிஃப் மைனாரிடி ஷியாக்கள் வாழும் பகுதியாகும். ஷியா பிரிவினரின் மசூதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், ஜித்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரம் அருகே சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

medina-mosque-bomb2

LEAVE A REPLY