(Article) முஸ்லிமல்லாதவர்களுடனான நபிகளாரின் நடவடிக்கைகள்

2
383

 

(அன்வாரி மதனி BA)

handshakeதிடமாக எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களது தூதுத்துவத்தினை உற்றுநோக்குகின்றவர். அது மனிதனது கண்ணியத்தை பாதுக்காத்து, அவனது அந்தஸ்தை உயரத்தியுள்ளதை கண்டுகொள்வார். மேலும் மனிதர்கள் அனைவரும் ஆதமின் பிள்ளைகளாகின்றனர் அவர்கள் முஸ்லிம்களாயினும், முஸ்லிமல்லாதவர்கலாயினும் சரி. அல்லாஹ் ஆதமின் மக்கள் அனைவரையும் கண்ணியப்படுத்தியுள்ளான்.

அல்லாஹ் அவனது குர்ஆனில் கூறும் போது “நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும்,கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து,நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.”

(17:70)

அனைவருக்கும் மனிதன் எனும் ரீதியில் அவர்களது இறைவன் முன் மனித உரிமைகள் இருக்கின்றன.அவர்களில் இறைவனிடம் மிகச்சிறந்து வேறுபடக்கூடியவர்கள் மார்க்கத்தை உண்மையை பின்பற்றல் நிலைநாட்டல்,அவர்களது நம்பிக்கை,உள்ளச்சம்,அவர்களது நன்னடத்தை ஆகியவற்றினை பொறுத்தாகும். எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த மனிதநேயத்தின் வெளிப்பாட்டினை தெளிவாக வெளிப்படுத்துவதற்கு அவர்களது முஸ்லிமல்லாதவர்களுடனான நடத்தை,நடைமுறைகளில் அளப்பரிய கரிசணை காட்டினார்கள்.

நபி ஸல் அவர்கள் மூலம் வந்துள்ள ஒரு ஹதீஸில் “நீஙகள் ஒரு மையித்தை கண்டால் அது உங்களை கடக்கும் வரை எழுந்து நில்லுங்கள்” மேலும் அவர்கள் முன்னால் ஒரு தடவை ஒரு சடலம் கொண்டு செல்லப்பட்டது. அதன்போது அவர்கள் எழுந்து நின்றார்கள், அப்போது இதுவொரு யஹூதியின் சடலம் என கூறப்பட்டது. அப்போது அவர்கள் “இதுவும் ஓர் ஆத்மாவல்லவா” எனக் கேட்டார்கள். (நூல்:புகாரி முஸ்லிம்)

முஸ்லிமல்லாதவர்களாக இருப்பினும் கூட எம்தூதர் ரஸூல் (ஸல்) அவர்கள் நோயுற்றவர்களை தரிசிப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் அபூதாலிப் அவர்கள் நோயுற்றபோது தரிசித்தார்கள்,இன்னும் யஹூதி சிறுவன் நோயுற்ற போது அவரை சுகம்  விசாரித்தார்கள்.(நூல்: புகாரி முஸ்லிம்).

அண்டைவீட்டினரின் உரிமைகளை நிறை வேற்றுவதில் அதிக கரிணையும் பேரார்வமும் கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விடத்தில் மிக சிறந்தவர் தனது தோழருக்கு சிறந்தவராக இருக்கின்றவர்,இன்னும் அண்டைவீட்டாரில் அல்லாஹ்வுக்கு மிகவும் சிறப்பானவர் தனது அண்டைவீட்டானுக்கு மிகவும் சிறந்தவர்.(நூல் அத்திர்மிதி.1944)

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் அவர்களை பின்பற்றாதவர்களது உரிமைகளை பறிப்பதற்காக வரவில்லை.மாறாக- மனிதர்களிடம் – அரிதாகவே காணக்கூடிய விட்டுக்கொடுப்புடன் அவர்களுடன் செயற்பட்டார்கள். இத்தகைய பிறருடனான நபி ஸல் அவர்களது நடவடிக்கைகளில் மிக முக்கிய அடிப்படைகளில் இவைகள் திகழ்கின்றன. மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது

நபி (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் உறுதியாகவும் திடமாகவும் இந்த இஸ்லாத்தினை பின்பற்றுவதில் தான் உண்மை இருக்கின்றது எனவும் முன்னைய அனைத்து தூதுத்துவத்தையும் பரிபூரணப்படுத்தக் கூடியது எனவும் நம்புகின்றனர், இருப்பினும் ஒரு போதும் இஸ்லாத்தில் பலவந்தமாக நுழையச்செய்ய வேண்டும் என முயற்ச்சி செய்யவில்லை. அக்கருத்தினை அல்குர்ஆன் தெட்டத்தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளது.

அல்லாஹ் கூறும் போது. “(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது;” (2:256).

மேலும் எவரையும் இஸ்லாத்தில் நுழைவதன் பால் பலவந்தப் படுத்தமுடியாது. அவ்வாறு பலவந்தப்படுத்துபவர் பிள்ளைகளுக்கு நன்மையை நாடக்கூடிய தந்தையாக இருப்பினும், பலவந்தப்படுத்தப் படுபவர் தன் மீது வைத்துள்ள அன்பின் மீது சந்தேகம் கொள்ளாத மகனாக இருப்பினும் சரி.

அல்லாஹ் கூறும் போது “மேலும் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?” (10:99)

இஸ்லாம் அவர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் நிலைக்கும் சுதந்திரத்தை மாத்திரம் வழங்குவதன் மூலம் மாத்திரம் போதுமாக்கி கொள்ளவில்லை,மாறாக அவர்களது சின்னங்களுக்கும் கிரிகைகளுக்கும் ஏற்ப அவர்கள் செயற்படுவதற்கான அனுமதியை அளித்துள்ளது. மேலும் அவர்களது வணக்கஸ்தலங்களை பேணிப்பராமரித்தது.

இன்னும் திடமாக நபி (ஸல்) அவர்கள் அவர்களது தோழர்களை வணக்கஸ்தலங்களில் உள்ளவர்களுக்கு இடையூறு விளைவிப்பதை தடுப்பவராக இருந்தார்கள். மேலும் ஒரு போதும் முஸ்லிமல்லாதவர்களது வணக்கஸ்தலத்துக்கு முஸ்லிம்களால் எந்தவொரு இடையூறும் ஏற்பட்டதில்லை. இத்தெளிவினை பின் வந்த தோழர்களும், பிரதிநிதிகளும்,சரியாகவும், தெளிவுடனும் புரிந்திருந்தனர்.

எனவே படைத்தளபதிகளுக்கு பிற மதத்தவர்களது வணக்கஸ்தலங்களுக்கு இடையூறு விளைவிக்காது இருக்குமாறும்,அதை ஆக்கிரமிக்காமல் இருக்குமாறும் நல்லுபதேசம் செய்தனர். இன்னும் அவர்களது மதத்தின் பிரகாரம் பிரத்தியேகமான அவர்களது சமூக வாழ்வு,திருமணம்,விவாகரத்து போன்றவற்றை முன்னெடுத்து செல்வதற்கும் அனுமதித்துள்ளது.

மற்றவர்களுடனான நீதி நேர்மை எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு மத்தியில் அவர்கள் அவர்களது மதம், இனம் ரீதியாக வேறுபட்டிருந்தாலும் கூட நீதியுடன் நடக்குமாறு ஏவியுள்ளார்கள்.இன்னும் திடமாக அல்லாஹ் இதை குர்ஆனில் வஹியாகவும் அவர்களுக்கு அறிவித்துள்ளான்.

அல்லாஹ் கூறும் போது “நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூற வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;”. 4:58.

இதை எமது நபி (ஸல்) அவர்கள் செவியேற்று அதை மிகவும் பரிபூரணமாக நிறைவேற்றினார்கள்.இந்த மனிதர்களுக்கு மத்தியிலான நீதத்தை கொண்டான ஏவலானது அவர்களது அந்தஸ்து, இனம்,மதம், குலம் ஆகியவற்றினை பொறுட்படுத்தாது, அனைத்து மனிதர்களுக்கு மத்தியிலுமாகும். அனைவரும் சமமானவர்கள் மாறாக உரிமையக்குரியவர் முஸ்லிம்களுக்கு அநீதி செய்பவனாக இருப்பினும் அவனது உரிமையை அவனுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும்.

இன்னும் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆனில் வேதம் கொடுக்கப்பட்டோர் அவர்களிடம் நீதம் கேட்டு வந்தால் அவர்களுக்கு மத்தியில் நீதத்தை கொண்டு தீர்ப்பு வழங்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.மிகத்தூயமைனவனாகிய அல்லாஹ் கூறும் போது.; “ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமானவர்களையே நேசிக்கின்றான்”. (5:42).

மேலும் முப்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் அவர்களது தோழர்களை உடன்படிக்கை செய்து கொண்டவரினது-அதாவது முஸ்லிம்களுடன் உடன்படிக்கை மூலம் இணைந்தவர்- உரிமைகள் பற்றி கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.அவற்றில் நபிகளார் கூறினார்கள்-“யார் உடன்படிக்கை செய்து கொண்ட ஒருவரை கொலை செய்கின்றாரோ அவர் சுவனத்தின் வாடையை நுகர மாட்டார்,அதன் வாடையானது நாற்பது ஆண்டுகளின் தூரத்தினை கொண்டது. (நூல்புகாரி: எண்: 6914)

“இன்னும் அறிந்து கொள்ளுங்கள் யார் உடன்படிக்கை செய்து கொண்டவரது உரிமையில் குறைவு செய்தால் அல்லது அதை பறித்தால், அல்லது அவர்களது சக்திக்கு அப்பால் சுமையை சுமத்தினால்,இன்னும் உரிமையின்றி அவரது உரிமைகளில் இருந்து பறித்தால்.நான் அவருக்கு சார்பாக வாதிடக்கூடிய சாட்சியாளராக மறுமையில் இருப்பேன்” (நூல் அபூதாவுத், 3053)

இன்னும் நபிகளார் கூறும் போது “யார் ஒரு உடன்படிக்கை செய்தவரை அவர் கொலை செய்யப்படுவதற்கான நேரத்திலல்லாது வேறு நேரத்தில் கொலை செய்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தை ஹராமாக்கிவிடுகின்றான்.(நூல் அஹ்மத்,19864,அபூதாவுத்,2760),

இன்னும் எமது நபிகளார் (ஸல்) அவர்கள் எந்தவொரு ஆத்மாவையும் வேதனை செய்வதை விட்டும் தடுத்துள்ளார்கள்.அதில் இஸ்லாத்தினை நிபந்தனையாக இடவில்லை.அவர்கள் கூறினார்கள்.நிச்சயமாக “கண்ணியமிக்க அல்லாஹ் இம்மையில் மனிதர்களை தும்புறுத்தியவர்களை அவன் தும்புறுத்துவான்”.(நூல் முஸ்லிம் 2613).

திடமாக எமது நபிகளாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கின்ற முஸ்லிமல்லாதவர்களது உரிமைகளுக்கு உத்தரவாதமளித்துள்ளார்கள். அவர்களது உயிருக்கு,சொத்துக்களுக்கு,  மானங்களுக்கு பாதுகாப்பளித்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாமிய பூமியில் வாழும் காலமெல்லாம் முஸ்லிம்,முஸ்லிமல்லாத எவராலும் அவற்றின் மீது இடையூறு விளைவிக்கமுடியாது.

மற்றவருடனான சிறந்த நடத்தை திடமாக நபிகளாரது வழிகாட்டல்கள் மிகமுக்கிய முன்மாதிரிகளை விட்டுச்சென்றுள்ளன. அதாவது ஒரு முஸ்லிமின் அடிப்படை அனைத்து படைப்புகளுடனும் சீரிய நடத்தை என்பதாகும்.இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நிச்சயமாக நான் நற்குணங்களை பூர்த்தி செய்வதற்காக  பிரிதொரு அறிவிப்பில் சீர்செய்வதற்காக-அனுப்பட்டுள்ளேன்.என.(நூல்: அஹ்மத் ,8729).

இந்த நற்குணமானது முஸ்லிம்,முஸ்மல்லாத அனைவருக்கும் சமமானதாகும். சமூகங்களுக்கு மத்தியலும்,படைப்பினங்களுக்கு மத்தியிலுமான மேலும் ஒருவருக்கிடையிலான வாழ்க்கை,விளக்கம்,உதவி ஒத்தாசை ஆகியன அதிகம் மனிதநேயத்தின் பால் தேவை காண்கின்றன.இன்னும் எமது நபி (ஸல்) அவர்கள் அவரது மார்க்க வழிகாட்டலில் அனைத்து வழிகளிலும் கருணையை கொண்டும், அனைத்திலும் அழகிய நன்னடத்தையை கொண்டும் ஏவியுள்ளார்கள்.

மாறாக அல்குர்ஆனும் தெளிவாக முஸ்லிம் அல்லாதவர்களுடனும் கூட அவர்கள் அத்துமீறாதவர்களாயின் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் என கூறுகின்றது.

அல்லாஹ் கூறும் போது. “மார்க்க (விடய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்” (60:8).

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த வசனத்திலுள்ள “பிர்” நன்மை என்பதை விளக்கும் போது கூறுகின்றனர்.அவர்களில் பலவீனர்களுக்கு இரக்கம் காட்டல்,அவர்களில் உள்ள வரியவர்களின் தேவைகளை நிறைவேற்றல், அவர்களில் பசித்தோருக்கு உணவளித்தல்,அவர்களில் ஆடையற் றோருக்கு ஆடையணிவித்தல், அவர்கள் நெகிழும் – இரக்கமாகவும், அவர்கள் நெகிழும் தன்மையுடனும்- வார்த்தைகளால் பேசுதல், இழிவுபடுத்தல்,பயமுறுத்தல் ஆகிய வழிகளிலல்லாது. -அண்டைவீட்டினராக இருக்கும் போது அவர்களது சில தீமைகளை தாங்கிக்கொள்ளல், அதனை நீக்குவதற்கு சக்திபெற்றிருந்த போதிலும்.அவர்களுக்கு பணிவாகவும்,அச்சத்திற்காகவும், பேராசைக்காகவும் அல்ல, அவர்களுக்கு நேர்வழியை கொண்டும் அவர்கள் ஈடேற்றம் பெற்றவர்களாக ஆகுவதற்கும் பிராத்தித்தல்,அவர்களுக்கு அவர்களது மார்க்க,உலக ரீதியிலான அனைத்து விடயஙகலிலும் நல்லுபதேசம் செய்தல். அவர்களது மறைவானவானற்றின் மீது எவராவது இடையூறு விளைவிக்கும் போது அத்தீமையிலிருந்து பாதுகாத்தல்,போன்றனவாகும்.-(பார்க்க: நூல், அல்புரூக் அல் கராஃபீ என்பவரது நூலில்)-

இன்னும் அவர்களில் உறவினர்களுக்கு மத்தியில் நல்லமுறையில் நடப்பதானது மிகவும் முக்கியமானது. பெற்றோருடனானது கட்டாயம் எனும் நிலையை அடைகின்றது.அபூபக்கர் (ரலி) அவர்களது மகள் அஸ்மா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்த (ஹுதைபிய்யா உடன் படிக்கையின்) காலகட்டத்தில் என் தாயார் இணைவைப்பவராக தன் தந்தையுடன் (என் பாட்டனாருடன்) என்னிடம் வந்திருந்தார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரியவளாக, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயார் என்னிடம் ஆசையோடு வந்திருக்கிறார். நான் அவரின் உறவைப் பேணி நடந்து கொள்ளலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவரின் உறவைப் பேணி நடந்து கொள்” என்று கூறினார்கள். (நூல், புகாரி முஸ்லிம்.

நஜ்ரான் தேசத்திலிருந்து கிறிஸ்தவர்களிலிருந்து ஒரு குழுவினர் மதீனாவிலிருக்கும் போது ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள் அவர்கள் அஸர் தொழுகைக்கு பின் பள்ளினுள் நுழைந்தார்கள் அது அவர்களது தொழுகை நேரமாக இருந்தது. அப்பள்ளியில் அவர்கள் தொழ ஆரம்பித்தனர்.அவர்களை மனிதர்கள் தடுக்கமுற்பட்டனர் அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை விட்டுவிடுங்கள் என கூறினார்கள், அவர்களும் கிழக்கை நோக்கி தொழுதார்கள்.

முஃமின்களின் தாயான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.ரஸூல் (ஸல்) அவர்கள் தம் போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள் அது அவர்களது குடும்பச்செலவுக்காகும் (நூல், புகாரி ,எண் : 2916).

இன்னும் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமகளை முஸ்லிம்களது பாதுகாப்பில் வாழும் திம்மிக்களை நல்லமுறையில் பராமரிக்குமாறு ஏவினார்கள்.அவர்களில் செலவுகளின் பால் தேவைகாண்போரை அது பொறுப்பேற்றுக்கொள்ளும். இன்னும் இஸ்லாமிய அரசு முஸ்லிம் ஏழைகளுக்கும்,ஏழை திம்மிகளுக்கும் பொறுப்பாகும்.அவர்களதும் அவர்களுக்கு கீழ் இருக்கும் கஷ்டவாளிகளினதும் வாழ்க்கையை செலவை பொறுப்பேற்கும்.அவர்கள் இஸ்லாமிய அரசின் குடிமக்களாவார்கள்.அதுவே தனக்கு கீழ் இருக்கும் அனைவரக்கும் பொறுப்பாகும். மேலும் திடமாக ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளாவர், ஒவ்வொருவரது பொறுப்பு மேற்பார்வை பற்றி வினவப்படுவர். (நூல், புகாரி, 5188 முஸ்லிம்).

இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ குழுவினரை ஷாம் தேசத்தில் கடந்து சென்ற போது அவர்களுக்கு நன்கொடைகளிலிருந்து வழங்குமாறு பணித்தார்கள். இன்னும் அவர்களுக்கு இயலாமை,வறுமை,வயோதிபம் ஆகியவற்றின் போது அவர்களுக்கு உணவுக்கான நடவடிக்கையை நடைமுறைக்கு கொண்டுவறுமாறும் பணித்தார்கள். சம்பாதிப்பதற்கும் தொழில் செய்வதற்குமாறு உரிமை முஸ்லிம்களின் தேசங்களில் முஸ்லிமல்லாதவர்கள் தொழில் செய்வதற்கும்,சம்பாதிப்பதற்கும் அவர்களாகவே தொழில் செய்வதற்கும், அல்லது பிறருடனான உடன் படிக்கை ரீதியானதாக இருந்தாலும் சரி. மேலும் அவர்கள் சுயமாக தெரிவு செய்யும் கைத்தொழில்களில் ஈடுபடவும்,அவர்கள் விரும்பும் பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும், உரிமையை எமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள்.

ஒரு நிபந்தனையுடன் அது செய்யும் தொழில் ஆகுமானதாக இருத்தல்.இதில் அவர்களது நிலை முஸ்லிம்களுடன் சரிசமமானதாகும். அவர்களுக்கு விற்பதற்கும்,வாங்குவதற்கும்,ஏனைய உடன்படிக்கைகளுக்குமான உரிமைஇருக்கின்றது.அவர்கள் வட்டியை தவிர்ந்து -வியாபாரத்தில் -அதிலுள்ள அனைத்துவித பொருளியல் நடைமுறைகளுக்குமான உரிமை இருக்கின்றது. வட்டியை தவிர இன்னும் பன்றி,மது ஆகியவற்றின் மீதான ,கொடுக்கல் வாங்கல், விறபனை,மேலும் இஸ்லாம் தடுத்த இஸ்லாமிய சமூகத்துக்கு தீங்கிழைக்ககூடியவைகள் என்பன.

அவர்களுக்கும் அவர்களது கொடுக்கல் வாங்கலில் அவர்களுக்கு உரிமையுண்டு.மாறாக அவர்கள் தடுக்கப்பட்டவை மேற்கூறப்பட்டவைகளில் அவர்களுக்கும் அவர்களது சமூகத்துக்கும் ஏற்படக்கூடிய தீமைகளிலினாலாகும்.இன்னும் அவர்கள் ஏனைய உடமைகளை சொந்தமாக்கிகொள்ளல், கைத்தொழில்கள், தொழிகளில் ஈடுபடல் போன்றவை.

முஸ்லிமல்லாதவர்களுடனான நபிகளாரின் நடவடிக்கைகள் திடமாக எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களது தூதுத்துவத்தினை உற்று நோக்குகின்றவர். அது மனிதனது கண்ணியத்தை பாதுக்காத்து, அவனது அந்தஸ்தை உயரத்தியுள்ளதை கண்டுகொள்வார்.

மேலும் மனிதர்கள் அனைவரும் ஆதமின் பிள்ளைகளாகின்றனர் அவர்கள் முஸ்லிம்களாயினும், முஸ்லிமல்லாதவர்கலாயினும் சரி.அல்லாஹ் ஆதமின் மக்கள் அனைவரையும் கண்ணியப்படுத்தியுள்ளான்.அல்லாஹ் அவனது குர்ஆனில் கூறும் போது “நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும்,கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து,நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.” (17:70)

அனைவருக்கும் மனிதன் எனும் ரீதியில் அவர்களது இறைவன் முன் மனித உரிமைகள் இருக்கின்றன.அவர்களில் இறைவனிடம் மிகச்சிறந்து வேறுபடக்கூடியவர்கள் மார்க்கத்தை உண்மையை பின்பற்றல் நிலைநாட்டல்,அவர்களது நம்பிக்கை,உள்ளச்சம்,அவர்களது நன்னடத்தை ஆகியவற்றினை பொறுத்தாகும்.எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த மனிதநேயத்தின் வெளிப்பாட்டினை தெளிவாக வெளிப்படுத்துவதற்கு அவர்களது முஸ்லிமல்லாதவர்களுடனான நடத்தை,நடைமுறைகளில் அளப்பரிய கரிசணை காட்டினார்கள்.

நபி ஸல் அவர்கள் மூலம் வந்துள்ள ஒரு ஹதீஸில் “நீஙகள் ஒரு மையித்தை கண்டால் அது உங்களை கடக்கும் வரை எழுந்து நில்லுங்கள்” மேலும் அவர்கள் முன்னால் ஒரு தடவை ஒரு சடலம் கொண்டு செல்லப்பட்டது. அதன்போது அவர்கள் எழுந்து நின்றார்கள், அப்போது இதுவொரு யஹூதியின் சடலம் என கூறப்பட்டது. அப்போது அவர்கள் “இதுவும் ஓர் ஆத்மாவல்லவா” எனக் கேட்டார்கள். (நூல்:புகாரி முஸ்லிம்)

முஸ்லிமல்லாதவர்களாக இருப்பினும் கூட எம்தூதர் ரஸூல் (ஸல்) அவர்கள் நோயுற்றவர்களை தரிசிப்பவர்களாக இருந்தார்கள்.அவர்கள் அபூதாலிப் அவர்கள் நோயுற்றபோது தரிசித்தார்கள்,இன்னும் யஹூதி சிறுவன் நோயுற்ற போது அவரை சுகம் விசாரித்தார்கள்.(நூல்: புகாரி முஸ்லிம்). அண்டைவீட்டினரின் உரிமைகளை நிறை வேற்றுவதில் அதிக கரிணையும் பேரார்வமும் கொண்டார்கள்.அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விடத்தில் மிக சிறந்தவர் தனது தோழருக்கு சிறந்தவராக இருக்கின்றவர்,இன்னும் அண்டைவீட்டாரில் அல்லாஹ்வுக்கு மிகவும் சிறப்பானவர் தனது அண்டைவீட்டானுக்கு மிகவும் சிறந்தவர்.(நூல் அத்திர்மிதி.1944)

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் அவர்களை பின்பற்றாதவர்களது உரிமைகளை பறிப்பதற்காக வரவில்லை.மாறாக- மனிதர்களிடம் – அரிதாகவே காணக்கூடிய விட்டுக்கொடுப்புடன் அவர்களுடன் செயற்பட்டார்கள்.இத்தகைய பிறருடனான நபி ஸல் அவர்களது நடவடிக்கைகளில் மிக முக்கிய அடிப்படைகளில் இவைகள் திகழ்கின்றன.

மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது நபி (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் உறுதியாகவும் திடமாகவும் இந்த இஸ்லாத்தினை பின்பற்றுவதில் தான் உண்மை இருக்கின்றது எனவும் முன்னைய அனைத்து தூதுத்துவத்தையும் பரிபூரணப்படுத்தக் கூடியது எனவும் நம்புகின்றனர்,இருப்பினும் ஒரு போதும் இஸ்லாத்தில் பலவந்தமாக நுழையச்செய்ய வேண்டும் என முயற்ச்சி செய்யவில்லை. அக்கருத்தினை அல்குர்ஆன் தெட்டத்தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளது.

அல்லாஹ் கூறும் போது. “(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது;” (2:256). மேலும் எவரையும் இஸ்லாத்தில் நுழைவதன் பால் பலவந்தப் படுத்தமுடியாது. அவ்வாறு பலவந்தப்படுத்துபவர் பிள்ளைகளுக்கு நன்மையை நாடக்கூடிய தந்தையாக இருப்பினும், பலவந்தப்படுத்தப் படுபவர் தன் மீது வைத்துள்ள அன்பின் மீது சந்தேகம் கொள்ளாத மகனாக இருப்பினும் சரி.அல்லாஹ் கூறும் போது “மேலும் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?” (10:99)

இஸ்லாம் அவர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் நிலைக்கும் சுதந்திரத்தை மாத்திரம் வழங்குவதன் மூலம் மாத்திரம் போதுமாக்கி கொள்ளவில்லை,மாறாக அவர்களது சின்னங்களுக்கும் கிரிகைகளுக்கும் ஏற்ப அவர்கள் செயற்படுவதற்கான அனுமதியை அளித்துள்ளது.மேலும் அவர்களது வணக்கஸ்தலங்களை பேணிப்பராமரித்தது.இன்னும் திடமாக நபி (ஸல்) அவர்கள் அவர்களது தோழர்களை வணக்கஸ்தலங்களில் உள்ளவர்களுக்கு இடையூறு விளைவிப்பதை தடுப்பவராக இருந்தார்கள்.

மேலும் ஒரு போதும் முஸ்லிமல்லாதவர்களது வணக்கஸ்தலத்துக்கு முஸ்லிம்களால் எந்தவொரு இடையூறும் ஏற்பட்டதில்லை. இத்தெளிவினை பின் வந்த தோழர்களும்,பிரதிநிதிகளும்,சரியாகவும், தெளிவுடனும் புரிந்திருந்தனர்.எனவே படைத்தளபதிகளுக்கு பிற மதத்தவர்களது வணக்கஸ்தலங்களுக்கு இடையூறு விளைவிக்காது இருக்குமாறும், அதை ஆக்கிரமிக்காமல் இருக்குமாறும் நல்லுபதேசம் செய்தனர்.இன்னும் அவர்களது மதத்தின் பிரகாரம் பிரத்தியேகமான அவர்களது சமூக வாழ்வு,திருமணம்,விவாகரத்து போன்றவற்றை முன்னெடுத்து செல்வதற்கும் அனுமதித்துள்ளது.

மற்றவர்களுடனான நீதி நேர்மை எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு மத்தியில் அவர்கள் அவர்களது மதம்,இனம் ரீதியாக வேறுபட்டிருந்தாலும் கூட நீதியுடன் நடக்குமாறு ஏவியுள்ளார்கள்.இன்னும் திடமாக அல்லாஹ் இதை குர்ஆனில் வஹியாகவும் அவர்களுக்கு அறிவித்துள்ளான்.

அல்லாஹ் கூறும் போது “நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூற வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;”. 4:58.

இதை எமது நபி (ஸல்) அவர்கள் செவியேற்று அதை மிகவும் பரிபூரணமாக நிறைவேற்றினார்கள்.இந்த மனிதர்களுக்கு மத்தியிலான நீதத்தை கொண்டான ஏவலானது அவர்களது அந்தஸ்து,இனம்,மதம், குலம் ஆகியவற்றினை பொறுட்படுத்தாது, அனைத்து மனிதர்களுக்கு மத்தியிலுமாகும்.அனைவரும் சமமானவர்கள் மாறாக உரிமையக்குரியவர் முஸ்லிம்களுக்கு அநீதி செய்பவனாக இருப்பினும் அவனது உரிமையை அவனுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும்.

இன்னும் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆனில் வேதம் கொடுக்கப்பட்டோர் அவர்களிடம் நீதம் கேட்டு வந்தால் அவர்களுக்கு மத்தியில் நீதத்தை கொண்டு தீர்ப்பு வழங்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். மிகத்தூயமைனவனாகிய அல்லாஹ் கூறும் போது.; “ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமானவர்களையே நேசிக்கின்றான்”. (5:42).

மேலும் முப்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் அவர்களது தோழர்களை உடன்படிக்கை செய்து கொண்டவரினது-அதாவது முஸ்லிம்களுடன் உடன்படிக்கை மூலம் இணைந்தவர்- உரிமைகள் பற்றி கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.அவற்றில் நபிகளார் கூறினார்கள்-“யார் உடன்படிக்கை செய்து கொண்ட ஒருவரை கொலை செய்கின்றாரோ அவர் சுவனத்தின் வாடையை நுகர மாட்டார், அதன் வாடையானது நாற்பது ஆண்டுகளின் தூரத்தினை கொண்டது. (நூல் புகாரி: எண்: 6914)

“இன்னும் அறிந்து கொள்ளுங்கள் யார் உடன்படிக்கை செய்து கொண்டவரது உரிமையில் குறைவு செய்தால் அல்லது அதை பறித்தால், அல்லது அவர்களது சக்திக்கு அப்பால் சுமையை சுமத்தினால்,இன்னும் உரிமையின்றி அவரது உரிமைகளில் இருந்து பறித்தால்.நான் அவருக்கு சார்பாக வாதிடக்கூடிய சாட்சியாளராக மறுமையில் இருப்பேன்” (நூல் அபூதாவுத், 3053) இன்னும் நபிகளார் கூறும் போது “யார் ஒரு உடன்படிக்கை செய்தவரை அவர் கொலை செய்யப்படுவதற்கான நேரத்திலல்லாது வேறு நேரத்தில் கொலை செய்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தை ஹராமாக்கிவிடுகின்றான்.(நூல் அஹ்மத்,19864,அபூதாவுத்,2760),

இன்னும் எமது நபிகளார் (ஸல்) அவர்கள் எந்தவொரு ஆத்மாவையும் வேதனை செய்வதை விட்டும் தடுத்துள்ளார்கள்.அதில் இஸ்லாத்தினை நிபந்தனையாக இடவில்லை.அவர்கள் கூறினார்கள்.நிச்சயமாக “கண்ணியமிக்க அல்லாஹ் இம்மையில் மனிதர்களை தும்புறுத்தியவர்களை அவன் தும்புறுத்துவான்”.(நூல் முஸ்லிம் 2613).

திடமாக எமது நபிகளாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கின்ற முஸ்லிமல்லாதவர்களது உரிமைகளுக்கு உத்தரவாதமளித்துள்ளார்கள்.அவர்களது உயிருக்கு,சொத்துக்களுக்கு, மானங்களுக்கு பாதுகாப்பளித்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாமிய பூமியில் வாழும் காலமெல்லாம் முஸ்லிம், முஸ்லிமல்லாத எவராலும் அவற்றின் மீது இடையூறு விளைவிக்கமுடியாது.

மற்றவருடனான சிறந்த நடத்தை திடமாக நபிகளாரது வழிகாட்டல்கள் மிகமுக்கிய முன்மாதிரிகளை விட்டுச்சென்றுள்ளன. அதாவது ஒரு முஸ்லிமின் அடிப்படை அனைத்து படைப்புகளுடனும் சீரிய நடத்தை என்பதாகும்.

இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நிச்சயமாக நான் நற்குணங்களை பூர்த்தி செய்வதற்காக -பிரிதொரு அறிவிப்பில் சீர்செய்வதற்காக-அனுப்பட்டுள்ளேன்.என.(நூல்: அஹ்மத் ,8729).இந்த நற்குணமானது முஸ்லிம்,முஸ்மல்லாத அனைவருக்கும் சமமானதாகும். சமூகங்களுக்கு மத்தியலும்,படைப்பினங்களுக்கு மத்தியிலுமான மேலும் ஒருவருக்கிடையிலான வாழ்க்கை,விளக்கம்,உதவி ஒத்தாசை ஆகியன அதிகம் மனிதநேயத்தின் பால் தேவை காண்கின்றன.

இன்னும் எமது நபி (ஸல்) அவர்கள் அவரது மார்க்க வழிகாட்டலில் அனைத்து வழிகளிலும் கருணையை கொண்டும், அனைத்திலும் அழகிய நன்னடத்தையை கொண்டும் ஏவியுள்ளார்கள்.மாறாக அல்குர்ஆனும் தெளிவாக முஸ்லிம் அல்லாதவர்களுடனும் கூட அவர்கள் அத்துமீறாதவர்களாயின் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் என கூறுகின்றது.அல்லாஹ் கூறும் போது. “மார்க்க (விடய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்” (60:8).

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த வசனத்திலுள்ள “பிர்” நன்மை என்பதை விளக்கும் போது கூறுகின்றனர்.அவர்களில் பலவீனர்களுக்கு இரக்கம் காட்டல்,அவர்களில் உள்ள வரியவர்களின் தேவைகளை நிறைவேற்றல், அவர்களில் பசித்தோருக்கு உணவளித்தல்,அவர்களில் ஆடையற் றோருக்கு ஆடையணிவித்தல், அவர்கள் நெகிழும் – இரக்கமாகவும், அவர்கள் நெகிழும் தன்மையுடனும்- வார்த்தைகளால் பேசுதல், இழிவுபடுத்தல், பயமுறுத்தல் ஆகிய வழிகளிலல்லாது.

அண்டைவீட்டினராக இருக்கும் போது அவர்களது சில தீமைகளை தாங்கிக்கொள்ளல், அதனை நீக்குவதற்கு சக்திபெற்றிருந்த போதிலும். அவர்களுக்கு பணிவாகவும், அச்சத்திற்காகவும்,பேராசைக்காகவும் அல்ல,அவர்களுக்கு நேர்வழியை கொண்டும் அவர்கள் ஈடேற்றம் பெற்றவர்களாக ஆகுவதற்கும் பிராத்தித்தல், அவர்களுக்கு அவர்களது மார்க்க,உலக ரீதியிலான அனைத்து விடயஙகலிலும் நல்லுபதேசம் செய்தல். அவர்களது மறைவானவானற்றின் மீது எவராவது இடையூறு விளைவிக்கும் போது அத்தீமையிலிருந்து பாதுகாத்தல்,போன்றனவாகும்.-(பார்க்க: நூல், அல்புரூக் அல் கராஃபீ என்பவரது நூலில்)-

இன்னும் அவர்களில் உறவினர்களுக்கு மத்தியில் நல்லமுறையில் நடப்பதானது மிகவும் முக்கியமானது.பெற்றோருடனானது கட்டாயம் எனும் நிலையை அடைகின்றது. அபூபக்கர் (ரலி) அவர்களது மகள் அஸ்மா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்த (ஹுதைபிய்யா உடன் படிக்கையின்) காலகட்டத்தில் என் தாயார் இணைவைப்பவராக தன் தந்தையுடன் (என் பாட்டனாருடன்) என்னிடம் வந்திருந்தார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரியவளாக, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயார் என்னிடம் ஆசையோடு வந்திருக்கிறார். நான் அவரின் உறவைப் பேணி நடந்து கொள்ளலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவரின் உறவைப் பேணி நடந்து கொள்” என்று கூறினார்கள். (நூல், புகாரி முஸ்லிம்.

நஜ்ரான் தேசத்திலிருந்து கிறிஸ்தவர்களிலிருந்து ஒரு குழுவினர் மதீனாவிலிருக்கும் போது ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள் அவர்கள் அஸர் தொழுகைக்கு பின் பள்ளினுள் நுழைந்தார்கள் அது அவர்களது தொழுகை நேரமாக இருந்தது. அப்பள்ளியில் அவர்கள் தொழ ஆரம்பித்தனர்.அவர்களை மனிதர்கள் தடுக்கமுற்பட்டனர் அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை விட்டுவிடுங்கள் என கூறினார்கள், அவர்களும் கிழக்கை நோக்கி தொழுதார்கள்.

முஃமின்களின் தாயான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ரஸூல் (ஸல்) அவர்கள் தம் போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள் அது அவர்களது குடும்பச்செலவுக்காகும் (நூல், புகாரி ,எண் : 2916).

இன்னும் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமகளை முஸ்லிம்களது பாதுகாப்பில் வாழும் திம்மிக்களை நல்லமுறையில் பராமரிக்குமாறு ஏவினார்கள். அவர்களில் செலவுகளின் பால் தேவைகாண்போரை அது பொறுப்பேற்றுக்கொள்ளும். இன்னும் இஸ்லாமிய அரசு முஸ்லிம் ஏழைகளுக்கும்,ஏழை திம்மிகளுக்கும் பொறுப்பாகும். அவர்களதும் அவர்களுக்கு கீழ் இருக்கும் கஷ்டவாளிகளினதும் வாழ்க்கையை செலவை பொறுப்பேற்கும்.அவர்கள் இஸ்லாமிய அரசின் குடிமக்களாவார்கள்.அதுவே தனக்கு கீழ் இருக்கும் அனைவரக்கும் பொறுப்பாகும்.மேலும் திடமாக ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளாவர், ஒவ்வொருவரது பொறுப்பு மேற்பார்வை பற்றி வினவப்படுவர். (நூல், புகாரி, 5188 முஸ்லிம்).

இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ குழுவினரை ஷாம் தேசத்தில் கடந்து சென்ற போது அவர்களுக்கு நன்கொடைகளிலிருந்து வழங்குமாறு பணித்தார்கள். இன்னும் அவர்களுக்கு இயலாமை, வறுமை, வயோதிபம் ஆகியவற்றின் போது அவர்களுக்கு உணவுக்கான நடவடிக்கையை நடைமுறைக்கு கொண்டுவறுமாறும் பணித்தார்கள். சம்பாதிப்பதற்கும் தொழில் செய்வதற்குமாறு உரிமை முஸ்லிம்களின் தேசங்களில் முஸ்லிமல்லாதவர்கள் தொழில் செய்வதற்கும்,சம்பாதிப்பதற்கும் அவர்களாகவே தொழில் செய்வதற்கும், அல்லது பிறருடனான உடன் படிக்கை ரீதியானதாக இருந்தாலும் சரி.

மேலும் அவர்கள் சுயமாக தெரிவு செய்யும் கைத்தொழில்களில் ஈடுபடவும்,அவர்கள் விரும்பும் பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும், உரிமையை எமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள்.ஒரு நிபந்தனையுடன் அது செய்யும் தொழில் ஆகுமானதாக இருத்தல். இதில் அவர்களது நிலை முஸ்லிம்களுடன் சரிசமமானதாகும்.

அவர்களுக்கு விற்பதற்கும் ,வாங்குவதற்கும், ஏனைய உடன்படிக்கைகளுக்குமான உரிமைஇருக்கின்றது.அவர்கள் வட்டியை தவிர்ந்து -வியாபாரத்தில் -அதிலுள்ள அனைத்துவித பொருளியல் நடைமுறைகளுக்குமான உரிமை இருக்கின்றது. வட்டியை தவிர இன்னும் பன்றி,மது ஆகியவற்றின் மீதான ,கொடுக்கல் வாங்கல், விறபனை,மேலும் இஸ்லாம் தடுத்த இஸ்லாமிய சமூகத்துக்கு தீங்கிழைக்ககூடியவைகள் என்பன.அவர்களுக்கும் அவர்களது கொடுக்கல் வாங்கலில் அவர்களுக்கு உரிமையுண்டு.

மாறாக அவர்கள் தடுக்கப்பட்டவை மேற்கூறப்பட்டவைகளில் அவர்களுக்கும் அவர்களது சமூகத்துக்கும் ஏற்படக்கூடிய தீமைகளிலினாலாகும்.இன்னும் அவர்கள் ஏனைய உடமைகளை சொந்தமாக்கிகொள்ளல், கைத்தொழில்கள், தொழிகளில் ஈடுபடல் போன்றவை. தமிழில் அபூ உமர்

2 COMMENTS

  1. எனவே படைத்தளபதிகளுக்கு பிற மதத்தவர்களது வணக்கஸ்தலங்களுக்கு இடையூறு விளைவிக்காது இருக்குமாறும். intha vasanam 2004 ku piraku irakkappattatho!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

LEAVE A REPLY