ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை, தயா மாஸ்டர் வழக்கு ஒத்திவைப்பு

0
621

GeargeMasterவிடுதலைப் புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அவருக்கு எதிரான வழக்கிலிருந்து இன்று (04) விடுதலை செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக கடந்த 2009 இல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சட்ட மாஅதிபரின் ஆலேசானைக்கமைய குறித்த உத்தரவை வழங்குவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான்பிலபிட்டிய அறிவித்தார்.

அவருக்கு எதிராக மேற்கொண்டுவரப்படும் விசாரணைகளிலிருந்து அவரை விடுதலை செய்யுமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளரான தயா மாஸ்டர் தொடர்பில், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்து, சட்ட மாஅதிபரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் கிடைக்காததால், அவர் குறித்தான வழக்கை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.

–TN-

LEAVE A REPLY