திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 38 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

0
145

(அப்துல்சலாம் யாசீம்)

75e70bd1-87d2-44f8-bbee-133ea210cd6bதிருகோணமலை-றோட்டரிக் கழகத்தின் 38 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் நேற்றிரவு (03) இடம் பெற்றது

திரு எஸ. சிவசங்கர் திருகோணமலை கழகத்தின் 38 ஆவது தலைவராக நியமிக்கப்பட்டார். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு இ. குகப்பிரியா கலந்து கொண்டார்.

இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் கிறிஸ்ரி ஐபோ புதிதாக தெரிவான தலைவர் எஸ்.சிவசங்கருக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஜே.டபிள்யூ.லப்பன் ஒரு புதிய ரொடேரியன் ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இதன் போது சென்னை-தமிழ்நாடு மவுண்ட் றோட்டரி கழகத்தின் சார்பாக மூதூர் பள்ளிக்குடியிருப்பு இந்துக்கல்லூரிக்கு 05 புதிய கணினிகள் – துணைக்கருவிகள் கையளிக்கப்பட்து.

LEAVE A REPLY