சைபீரியாவில் ரஷிய விமானம் வெடித்து சிதறியதில் 8 பேர் பலி

0
114

201607040855015460_8-dead-after-Russian-plane-on-fire-fighting-mission-crashes_SECVPFரஷியாவின் நெருக்கடி கால அமைச்சகத்துக்கு சொந்தமான தீயணைப்பு விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமையன்று சைபீரியாவின் இர்குத்ஸ்க் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்றபோது திடீரென மாயமானது. இந்தநிலையில் மாயமான அந்த விமானம் நடுவானில் பறந்தபோது வெடித்து சிதறி அங்குள்ள காட்டுப்பகுதியில் நொறுங்கி கிடப்பது நேற்று தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. விமானத்தில் இருந்த மேலும், 2 பேரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY