பேராதெனிய தீயினால் பெறுமதிமிக்க பொருட்கள் சேதம்

0
138

peradeniya_eng_lab_fireபோராதெனிய பல்கலைகழக பொறியியல் பீட ஆய்வுகூடத்தில் நேற்று (03) இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அக்கட்டடத்தின் மேல் மாடி பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கட்டடத்தின் ஒரு பகுதியில், ரோபோ நிர்மாணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொறியியல் மாணவர்கள், கட்டத்தின் மேல் மாடி தீப்பிடித்து எரிவதை அவதானித்ததை அடுத்து பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து கண்டி தீயணைப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணித்தியால பிரயத்தனத்தின் மூலம் தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்தினால் பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள், வெளிநாட்டு பல்கலைகழகங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பெறுமதிமிக்க உபரணங்கள் சேதமாகியுள்ளதாக பேராதெனிய பொலிஸார் தெரிவித்தனர்

மின் ஒழுக்கினால் தீ பரவியிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதுடன், தீ விபத்து தொடர்பில் மேலதிகவிசாரணை தொடர்வதாகவும் பேராதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

#Thinakaran

LEAVE A REPLY