மஜ்லிஸூல் பலாஹிய்யீன் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

0
145

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2d1e6a56-e56e-4ad6-927b-b809b2cdd71cகாத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மஜ்லிஸூல் பலாஹிய்யீன் ஏற்பாட்டில் ஒலுவில்-பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் அனுசரனையுடன் புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரயில் இடம்பெற்றது.

மஜ்லிஸூல் பலாஹிய்யீன் உப தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.முபாறக் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி இப்தார நோன்பு திறக்கும் நிகழ்வில் ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குனர் சபை செயலாளர் மௌலவி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி), மஜ்லிஸூல் பலாஹிய்யீன் செயலாளர் மௌலவி எம்.ஐ.எம்.முஸ்தகீம் (பலாஹி) உட்பட அதன் நிருவாகிகள்,உறுப்பினர்கள், பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் பிரதிநிதிகள்,உலமாக்கள், ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பிரதிநிதிகள், ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அல்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மார்க்க சொற்பொழிவை பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் தலைவரும்,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழு செயலாளருமான அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் (சூரி) நிகழ்த்தினார்.

b3183229-92df-42ff-ba1c-5857deaf9810

cb53cd39-8293-4a37-a2db-c9aa9b977a23

ce0f91ac-e2f4-47a8-b6af-aa220b027e6d

e7dd2053-2228-4f7d-861a-675a8490daad

LEAVE A REPLY