முஸம்மிலுக்கு ஜூலை 07 வரை விளக்கமறியல் நீடிப்பு

0
242

mohammed-muzammilவிமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளரான மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் ஜூலை 07 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திருமதி லங்கா ஜயரத்னவினால் இன்று (04) குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

மொஹமட் முஸம்மில், ஜனாதிபதி செயலகத்தின் வாகனத்தை பயன்படுத்தி அரசாங்கத்தின் ரூபா 62 இலட்சம் பணத்தை முறையற்ற விதத்தில் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்காக கடந்த ஜூன் 20 இல் கைது செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY