ஓட்டமாவடிப் பிரதேச சபையின் அடுத்த தவிசாளர் யார்?

0
276

FB_IMG_1467571631815அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கல்குடாப் பிரதேசத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத்தேர்தலானது கடந்த காலங்களை விட சில திருப்பு முனைகளைக் கொண்ட தேர்தலாக மாறலாமென தற்போதைய அரசியல் கள நிலவரப்படி எம்மால் கணிக்க முடிகின்றது.

அதற்கு முக்கிய காரணம் தற்சமயம் அப்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரதியமைச்சர் அமீர் அலியின் வலது கை செயற்பாட்டாளருமான கே.பி.எஸ்.ஹமீட் அவர்களின் அரசியல் திருப்பு முனையே பிரதான காரணியாகும்.

எது எதுவாக இருந்தாலும், கடந்த காலந்தொட்டு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையானது, பிரதியமைச்சர் அமீர் அலியின் கை வசமே இருந்து வந்திருக்கின்றதென்பதை நாம் அறியாமலில்லை.

தற்போதைய சூழ்நிலையில் தவிசாளர் ஹமீட் முஸ்லிம் காங்கிரஸுடன் இனணந்திருப்பது காங்கிரஸுக்கு அதிகமான சாதகங்களைத் தந்தாலும் கூட அது மக்கள் காங்கிரஸுக்கு பாரியதொரு இழப்பாகவே தென்படுகின்றது. இருந்தும், பிரதியமைச்சர் அமீர் அலி தவிசாளர் தனது கட்சியை விட்டு விலகி இரு வாரங்கள் ஆகின்ற நிலையில், இதுவரையில் அதனைப் பொருட்படுத்தாமல் மௌனித்து ஊடகங்களுக்கு எந்தவிதக் கருத்துக்களையும் வெளியிடாமலிருப்பது ஏதோ இரண்டு பேருக்கும் இதற்கு முன்னரே முரண்பாடு இருந்திருப்பதும், ஆகையால் தான் தவிசாளர் ஹமீட்டின் விலகளை பிரதியமைச்சர் அமீர் அலி பொருட்படுத்தாமல் விட்டு விட்டு மௌனியாக இருக்கின்றார் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

உண்மையில், இம்முறை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பாரியவொரு போட்டி நிலவக்கூடியதாகவே இருக்கின்றது. காலா காலமாக பிரதியமைச்சர் அமீர் அலி தன்வசம் வைத்திருந்த இந்தப்பிரதேச சபையானது, இம்முறை கை நழுவி விடுமோ என்ற எண்ணமும் அநேகரின் மனதில் தோன்றியிருக்கலாம்.

ஏனெனில், அதற்கான உத்திகளை முன்னாள் தவிசாளர் ஹமீட்டுடன் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் மேற்கொள்ளவிருப்பதே அதற்கான பின்னணிக் காரணியாகும்.

பிரதியமைச்சர் அமீர் அலியின் கட்சியிலிருந்து தேர்தலில் யார் களமிறங்குவாராே அதனைப் பொறுத்தே மக்களும் அதனைத் தீர்மானிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் அமீர் அலியின் முன்னனி செயற்பாட்டாளாராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அப்பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இலவத்தம்பி அஸ்மியே களமிறங்கக் கூடிய அதிக சாத்தியக்கூறுகள் தென்படுகின்றது.

அதனை கடந்த கால அவரின் அரசியல், சமூகமயமான செயற்பாடுகளைக் கொண்டு எம்மால் அறிய முடிகின்றது. சமூக சேவை, விளையாட்டு போன்ற துறைகளில் இவர் அதிக அக்கறை காட்டி ஊக்குவித்துச் செயற்படுவதாலே இன்று அநேகரின் எதிர்பார்ப்பும் இவரைக் களமிறக்க வேண்டுமென்ற எண்ணமுமாகவும் இருக்கின்றதென்பதை தற்கால அரசியல் நிலவரப்படி எம்மால் கணிக்க முடிகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பிரதேச சபை உறுப்பினர் இலவத்தம்பி அஸ்மி களமிறக்கப்படுமிடத்து அதற்குப் போட்டியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரைக்களமிறக்குமோ அதனை வைத்தே சுமாராக வெற்றியை நிர்ணயித்து கொள்ளக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. சமூக சேவைகள் மீது ஆர்வங்காட்டிச் செய்யக்கூடிய ஓர் இளம் படித்த தலைமையை களமிறக்குமாகவிருந்தால் மாத்திரமே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோறளைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

ஏனெனில், எதிர்க்கட்சி வேற்பாளர் கடந்த காலங்களில் அரசியலுக்கப்பால், மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் ஓர் பிரபலமானவர் என்பதினாலும் சமூக சேவைகளிலும் அக்கறை காட்டி வருவதினாலும் இவருடன் போட்டியிடுபவர் மேற்கூறியவைகளுடன் களமிறக்கபடுவாராக இருந்தால், மாத்திரமே தவிசாளருக்கான கனவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நனவாக அமையக்கூடும்.

அதற்கு மாறாக, அதிகமான மக்களுக்கும் பரீட்சையமில்லாத இதற்கு முன்னர் எந்தவித சமூக சேவையிலும் அக்கறை காட்டாத ஓர் புதுமுக வேற்பாளரைக் களமிறக்குமிடத்து நிச்சயம் அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தவிசாளருக்கான கனவு சாத்திமற்ற ஒன்றாகவே இருக்குமென்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

அதற்கு மாற்றமாக, முன்னாள் தவிசாளர் ஹமீட் களமிறக்கப்படுமிடத்து, நிச்சயம் கடந்த காலங்களை விட ஏட்டிக்கு போட்டியான நிலை இந்த முறை ஏற்படலாம்.

உண்மையில், அரசியல் என்று வந்தால் அநேக பாமர மக்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் இவர் ஏதாவது சமூக சார்ந்த விடயங்களில் பங்கெடுத்திருக்கின்றாரா? என்பதைப் பொறுத்தே வாக்குகளை யாருக்கு போட வேண்டுமென்று தீர்மானிக்கி்றார்கள். சிலர் கட்சிக்காக யாரைக் களமிறக்கினாலும் வாக்களிப்பவர்களாக இருந்தாலும் கூட, பிரதேச சபைத் தேர்தலைப் பொறுத்த வரையில், அரசியல் கட்சிகளுக்கப்பால் கல்வியறிவுள்ள ஓர் சமூக சேவை செய்யக் கூடிய இளம் தலைமையை தேர்வு செய்தால் தான் அது எம் எதிர்காலச் சந்ததியினருக்காவது பயனளிக்கும்.

வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை

LEAVE A REPLY